இன்று முதல் தொடங்கும் நீட் அல்லாத மருத்துவ படிப்புகளுக்கான விண்ணப்ப பதிவு!

 
மருத்துவ படிப்புகள்

பி.எஸ்சி. நர்சிங், பி.பார்ம். உள்ளிட்ட துணை மருத்துவ பட்ட படிப்புகளில் சேருவதற்கான விண்ணப்பப் பதிவு இன்று முதல் தொடங்குவதாக மருத்துவ கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது. பிஎஸ்சி நர்சிங், ரேடியோதெரபி டெக்னாலஜி, ரேடியோகிராபி, அனஸ்தீசியா, கார்டியாக், கண் மருத்துவம், விபத்து மற்றும் அவசர கால சிகிச்சை தொழில்நுட்பம், மருத்துவ ஆய்வக தொழில்நுட்பம், பி. பார்ம், பிபிடி,(இயன்முறை மருத்துவம், பிஓடி, பிஏஎஸ்எல்பி உள்ளிட்ட 19 துணை மருத்துவப் படிப்புகளுக்கு ஆன்லைன் மூலம் இன்று முதல் விண்ணப்பிக்க முடியும்.

மருத்துவ முதுநிலை படிப்புக்கு நீட் தேர்வை ரத்து செய்ய முடிவு | neet exam  for md, ms - hindutamil.in

இவை நீட் தேர்வு அல்லாத மருத்துவ படிப்புகள் என்பதால் 12ஆம் வகுப்பில் எடுத்த மதிப்பெண்கள் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும். இன்று ஆரம்பமாகும் விண்ணப்பப் பதிவு நவம்பர் மாதம் 8ஆம் தேதி வரை நடக்கும். அதாவது இன்று காலை 10 மணிக்கு தொடங்கி நவம்பர் 8ஆம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பங்களைப் பதிவு செய்யலாம். 

நீட் நுழைவுத் தேர்வு இல்லாமல் மருத்துவப் படிப்பு… சட்டப்பேரவையில் இன்று  சட்டமுன்முடிவு!

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:

செயலர்,
தேர்வுக்குழு,
162, பெரியார் நெடுஞ்சாலை,
கீழ்ப்பாக்கம்,
சென்னை.10.

இதனைப் பயன்படுத்தி தபால் மூலம் விண்ணப்பங்களை அனுப்பலாம். தபால் முறைக்கு நவம்பர் 10ஆம் தேதி கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. அதேபோல www.tnhealth.tn.gov.in, www.tnmedicalselection.org ஆகிய இணையதளங்களிலும் விண்ணப்பங்களைப் பதிவுசெய்ய முடியும்.