மதுரை எய்ம்ஸ் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்!!

 
madurai aiims

கடந்த 2015 ஆம் ஆண்டு மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவது குறித்த அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டது. இதற்காக தோப்பூரில் இடம் தேர்வு செய்யப்பட்டு சுமார் ரூ.1,264 கோடி மதிப்பில் 200 ஏக்கரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் , கடந்த 2019 ஆம் ஆண்டு ஜனவரி 27ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார்.  எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணியை ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமை மேற்கொண்டு வருகிறது.

tn

இந்நிலையில் மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரிக்கு பதிவாளர் உட்பட பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது. தகுதி உள்ளவர்கள் ஜூலை 24ம் தேதி மாலை 4.30 மணிக்குள் விண்ணப்பங்களை அனுப்பலாம்.

tn

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையில் 9 நிர்வாக அலுவலர் பணி இடங்களுக்கு ஜூலை 24ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.நேர்முகத் தேர்வுகளை ஜிப்மர் மருத்துவமனை நடத்தி பணியாளர்கள் இறுதி செய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான விண்ணப்பங்களை jipmer.edu.in/aiims -madurai, jipmer.edu.in ஆகிய இணையதளத்தில் விண்ணப்பங்களை தரவிறக்கம் செய்தலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.