உடனே விண்ணப்பீங்க..! ரூ.1.70 லட்சம் ஊதியத்தில் அரசு மருத்துவமனையில் வேலை..!

 
1

தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவமனைகளில் காலியாக இருக்கும் 2,553 மருத்துவர் காலிப் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.

Assistant Surgeon என்ற பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு மருத்துவப் படிப்பில் எம்பிபிஎஸ் பட்டம் பெற்று, தமிழ்நாடு மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும்.

1.07.2024 தேதியின்படி, பொது பிரிவினர் 37 வயதிற்குள் இருக்க வேண்டும். அதேநேரம், எஸ்சி, எஸ்டி, பிசி, எம்பிசி, பிசிஎம் மற்றும் டிஎன்சி பிரிவைச் சேர்ந்தவர்கள் 59 வயதுக்குள் இருக்க வேண்டும். மேலும், மாற்றுத்திறனாளிகள் 47 வயதிற்குள்ளும், முன்னாள் ராணுவத்தினர் 50 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும்.

இவர்களில் எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளி பிரிவினர் ரூபாய் 500 விண்ணப்பக் கட்டணமாகச் செலுத்த வேண்டும். இதர பிரிவினர் ரூபாய் 1,000 விண்ணப்பக் கட்டணமாகச் செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான விண்ணப்பங்களை https://www.mrb.tn.gov.in என்ற இணையதளம் முகவரியில் மே 15ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத்தால் அறிவிக்கப்பட்டுள்ள இந்த Assistant Surgeon பணியிடத்திற்கு ரூ.56,100 முதல் ரூ.1,77,500 ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.