உடனே விண்ணப்பீங்க..! லட்சத்தில் சம்பளம்... தமிழ்நாடு செய்தித்தாள் நிறுவனத்தில் வேலை..!
Aug 8, 2025, 12:14 IST1754635497370
TNPL நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன..
பணியின் விவரங்கள்
| பதவியின் பெயர் | காலிப்பணியிடங்கள் |
| டெபியூட்டி ஜென்ரல் மேனேஜர் (கணக்கு) | 1 |
| உதவி ஜென்ரல் மேனேஜர் (நிதி) | 1 |
| டெபியூட்டி ஜென்ரல் மேனேஜர் (இன்ஸ்ரூமெண்டேஷன்) | 1 |
| டெபியூட்டி ஜென்ரல் மேனேஜர் / உதவி ஜென்ரல் மேனேஜர் (Tissue Machine Production) | 1 |
| உதவி மேனேஜர் (Tissue Machine Production) | 2 |
| உதவி மேனேஜர் (Laboratory) | 1 |
| அதிகாரி (Digital Marketing) | 2 |
| மொத்தம் | 9 |
வயது வரம்பு
- தமிழ்நாடு அரசின் திட்டத்தின் கீழ் உள்ள இப்பணியிடங்களுக்கு 01.08.2025 தேதியின்படி வயது வரம்பு நிர்ணயிக்கப்படுகிறது.
- டெபியூட்டி ஜென்ரல் மேனேஜர் பதவிக்கு குறைந்தபட்சம் 46 வயது முதல் அதிகபடியாக 57 வயது வரை இருக்கலாம்.
- உதவி ஜென்ரல் மேனேஜர் பதவிக்கு குறைந்தபட்சம் 43 வயது முதல் அதிகபடியாக 50 வயது வரை இருக்கலாம்.
- டெபியூட்டி ஜென்ரல் மேனேஜர் பதவிக்கு குறைந்தபட்சம் 46 முதல் அதிகபடியாக 57 வயது வரை இருக்கலாம்.
- உதவி மேனேஜர் பதவிக்கு 28 வயது முதல் அதிகபடியாக 43 வயது வரை இருக்கலாம்.
- டெபியூட்டி ஜென்ரல் மேனேஜர் பதவிக்கு சிஏ முடித்திருக்க வேண்டும். மேலும் துறை சார்ந்து குறைந்தபட்சம் 26 வருட அனுபவம் தேவை.
- உதவி ஜென்ரல் மேனேஜர் பதவிக்கு சிஏ தகுதியுடன் 23 வருடம் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
- Instrumentation பிரிவில் டெபியூட்டி ஜென்ரல் மேனேஜர் பதவிக்கு இன்ஸ்ரூமெண்டேஷன் தொழில்நுட்பம், கருவியியல் மற்றும் கட்டுப்பாட்டு பொறியியல், மின்னணுவியல் மற்றும் கருவியியல் பொறியியல் ஆகியவற்றில் B.E. / B.Tech அல்லது செயல்முறை
- கருவி பாடத்தில் பிஜி டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். மேலும் 26 ஆண்டு அனுபவம் தேவை.
- Tissue Machine Production பிரிவில் உள்ள டெபியூட்டி ஜென்ரல் மேனேஜர் பதவிக்கு கெமிக்கல் பொறியியல், கெமிக்கல் தொழில்நுட்பம், கூழ் மற்றும் காகித தொழில்நுட்பம் ஆகியவற்றில் பொறியியல் அல்லது அறிவியல் பட்டப்படிப்புகளை பெற்றிருக்க வேண்டும். மேலும் குறைந்தபட்சம் 23 ஆண்டு அனுபவம் தேவை.
- Tissue Machine Production பிரிவில் உள்ள உதவி மேனேஜர் பதவிக்கு கெமிக்கல் பொறியியல் சார்ந்த படிப்புகளில் பட்டப்படிப்பும், 8 ஆண்டுகள் அனுபவமும் பெற்றிருக்க வேண்டும்.
- உதவி மேனேஜர் பதவிக்கு கெமிஸ்ட்ரி பாடப்பிரிவில் இளங்கலை அல்லது முதுகலை பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். மேலும் 8 ஆண்டுகள் அனுபவம் தேவை.
- டிஜிட்டல் மார்க்கெட்டிங்கில் உள்ள அதிகாரி பதவிக்கு கணினி அறிவியல், தகவல் தொடர்பியல், டிஜிட்டல் மார்க்கெட்டிக்கிங் ஆகியவற்றில் பட்டப்படிப்பு, எம்பிஏ முடித்திருக்க வேண்டும். மேலும் குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
- டெபியூட்டி ஜென்ரல் மேனேஜர் பதவிக்கு ரூ.86,600 முதல் ரூ.1,81,500 வரை சம்பளம் வழங்கப்படும்.
- உதவி ஜென்ரல் மேனேஜர் பதவிக்கு ரூ.70,100 முதல் ரூ.1,46,960 வரை சம்பளம் வழங்கப்படும்.
- டெபியூட்டி ஜென்ரல் மேனேஜர் பதவிக்கு ரூ.86,600 முதல் ரூ.1,81,500 வரை சம்பளம் வழங்கப்படும்.
- டெபியூட்டி ஜென்ரல் மேனேஜர் / உதவி ஜென்ரல் மேனேஜர் பதவிக்கு ரூ.70,100 முதல் ரூ.1,81,500 வரை சம்பளம் வழங்கப்படும்.
- உதவி மேனேஜர் பதவிக்கு ரூ.31,100 முதல் ரூ.65,350 வரை சம்பளம் வழங்கப்படும்.
- அதிகாரி பதவிக்கு அனுபவத்திற்கு ஏற்ப சம்பளம் நிர்ணயிக்கப்படும். தேர்வு செய்யப்படுபவர்கள் 2 ஆண்டுகள் ஒப்பந்த முறையில் பணியமர்த்தப்படுவார்கள்.
தேர்வு செய்யப்படும் முறை
தமிழ்நாடு அரசின் நிறுவனத்தில் உள்ள இப்பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்படும் முறை குறித்த தகவல் அறிவிப்பில் இடம்பெறவில்லை.
விண்ணப்பிக்கும் முறை
https://tnpl.com/work-with-us/ என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பப்படிவத்தை பூர்த்தி செய்து கல்வித்தகுதி, அனுபவம், முந்தைய நிறுவனங்கள் பெற்ற சம்பள விவரம் ஆகியவற்றுக்கான ஆவணங்களை இணைத்து தபால் மூலம் அனுப்பி விண்ணப்பிக்க வேண்டும்.


