ஏப். 16-ல் மக்களவைத் தேர்தல்?

 
election commision

மக்களவைத் தேர்தலை வரும் ஏப்ரல் 16 ஆம் தேதி நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏப்ரல் 16ஆம் தேதிக்கு ஏற்றவாறு தேர்தல் சார்ந்த பணிகளை வகுக்குமாறு தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

election


மாநில தேர்தல் அதிகாரிகளுக்கு தலைமைத் தேர்தல் ஆணையம் வரைவுத் திட்டத்தை வழங்கியுள்ளது. ஏப்ரல் 16-ஆம் தேதிக்கு ஏற்றவாறு தேர்தல் சார்ந்த பணிகளை வகுக்குமாறு ஆணையம் அறிவுறுத்தியுள்ளார். வாக்காளர் பட்டியல் உள்ளிட்ட முன்னேற்பாடு பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என தலைமை தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக டெல்லியிலுள்ள மாவட்ட அதிகாரிகளுக்கு மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி கடிதம் அனுப்பியுள்ளார். கடந்த முறை 2019 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 11 தொடங்கி மே 19 ஆம் தேதி வரை நடைபெற்றது. 2019 ஆம் ஆண்டு 7 கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடத்தப்பட்டது.

தமிழ்நாட்டை பொறுத்தவரை இறுதி வாக்காளர் பட்டியலை நேற்று தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, தமிழ்நாட்டில் 6 கோடியே 18 லட்சத்து 90 ஆயிரத்து 348 வாக்காளர்கள் உள்ளனர். தமிழ்நாட்டிலேயே அதிக வாக்காளர்களைக் கொண்ட தொகுதியாக செங்கல்பட்டு மாவட்டத்திற்குட்பட்ட சோழிங்கநல்லூர் சட்டமன்றத் தொகுதி உள்ளது. இத்தொகுதியில் மொத்தம் 6 லட்சத்து 60 ஆயிரத்து 419 வாக்காளர்கள் உள்ளனர், குறைந்த அளவு வாக்காளர்கள் கொண்ட தொகுதியாக நாகப்பட்டினம் மாவட்டத்திற்குட்பட்ட கீழ்வேளூர் சட்டமன்றத் தொகுதி உள்ளது. இத்தொகுதியில் மொத்த வாக்காளர்கள் ஒரு லட்சத்து 72 ஆயிரத்து 140 பேர் உள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.