Trinity Laban இசைக்கல்லூரியின் கௌரவ தலைவராக ஏ.ஆர்.ரகுமான் நியமனம்!
லண்டனை சேர்ந்த Trinity Laban இசைக்கல்லூரியின் கௌரவ தலைவராக ஏ.ஆர்.ரகுமானை அறிவித்திருக்கின்றனர்.
தமிழ் சினிமாவில் முன்னணி இசை அமைப்பாளராக விளங்கி வருபவர் ஏ.ஆர்.ரகுமான். இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் வெளியான திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார். இதேபோல் ஹாலிவுட் திரைப்படங்களுகும் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இந்த நிலையில், லண்டனை சேர்ந்த Trinity Laban இசைக்கல்லூரியின் கௌரவ தலைவராக ஏ.ஆர்.ரகுமானை அறிவித்திருக்கின்றனர்.
டிரினிட்டி லாபன் கன்சர்வேட்டரி ஆஃப் மியூசிக் அண்ட் டான்ஸ் என்பது இங்கிலாந்தின் லண்டனில் உள்ள ஒரு இசை மற்றும் நடனக் கல்லூரி ஆகும். டிரினிட்டி காலேஜ் ஆஃப் மியூசிக் மற்றும் லாபன் டான்ஸ் சென்டர் ஆகிய இரண்டு பழைய நிறுவனங்களின் இணைப்பாக இந்த கல்லூரி கடந்த 2005 இல் உருவாக்கப்பட்டது. இந்த கல்லூரியில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் இளங்கலை மற்றும் முதுகலை படிப்பு பயின்று வருகின்றனர்.


