சென்னையில் முதன்முறையாக ஏ.ஆர்.ரஹ்மான் சூஃபி இசை நிகழ்ச்சி..

 
ar-rahman-23


சென்னையில் மார்ச் 19ம் தேதி இசைப்புயல்  ஏ.ஆர்.ரஹ்மானின் சூஃபி (Sufi)  இசை நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் வருகிற மார்ச் 19ம் தேதி இசை நிகழ்ச்சி நடைபெற உள்ளதாக அண்மையில் திரைப்பட தொழிலாளர்கள் சங்கத்தின் (பெஃப்சி) தலைவர் ஆர்.கே.செல்வமணி தெரிவித்திருந்தார்.  தமிழ் சினிமாவில் பணியாற்றும் லைட்மேன்களுக்கு உதவ , நிதி திரட்டுவதற்காக இந்த இசை நிகழ்ச்சியை அவர் நடத்த இருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.  அண்மையில் ஏ.ஆர்.ரஹ்மான் ஸ்டூடியோவில் லைட் மேன் குமார் என்பவர் தவறி விழுந்து உயிரிழந்தார். அவரது குடும்பத்திற்கு தேவையான உதவிகளை ஏ.அர்.ரஹ்மான் செய்துவிட்ட போதிலும், சினிமா துறையில்  பணியாற்றும்   ஒட்டுமொத்த லைட்மேன்களுக்கும் உதவும் வகையில் அவர் இந்த முயற்சியை கையில் எடுத்திருக்கிறார்.

 சென்னையில் மார்ச் 19ல் ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சி..

அதன்படி,  "விங்ஸ் ஆஃப் லவ்" என்கிற தலைப்பில் சூஃபி இசை நிகழ்ச்சியை ரோட்டரி சங்கம், எஸ் எஸ் இன்டர்நேஷனல் லைவ் மற்றும் தனது ஏ.ஆர்.ரகுமான் பவுண்டேஷன் மூலமாக இணைந்து நடத்துகிறார். சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் இம்மாதம் 19ம் தேதி  மாலை 7 மணிக்கு  நடைபெறும் இந்த நிகழ்ச்சியில்  சூஃபி(Sufi)பாடல்கள் பாடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. திரைப்படப் பாடல்கள் பாடப்படாது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.  இந்த சூஃபி நிகழ்ச்சியில் பிரபல பின்னணி பாடகர் ஜாவித் அலி மற்றும் ட்ரம்ஸ் சிவமணி ஆகியோரும் பங்குபெறுகின்றனர். இந்த நிகழ்ச்சிக்கு நிதியுதவி அளிக்க விரும்புவோர் மற்றும் அனுமதி பாஸ் பெற விரும்புபவர்கள் www.wingsoflove.in என்கிற இணையதளத்தில் பெற்றுக்கொள்ளலாம் என்றும்,  72999 66666 என்கிற வாட்ஸ் அப் எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.