ஏ.ஆர்.ரகுமான் விரைவில் வீடு திரும்புவார்- மு.க.ஸ்டாலின்

உடல்நலக்குறைவு காரணமாக இசைப்புயல் ஏ .ஆர் .ரகுமான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். திடீர் நெஞ்சுவலி காரணமாக, சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள ஏ.ஆர்.ரகுமானுக்கு ஆஞ்சியோ சிகிச்சை மேற்கொள்ளப்படவுள்ளது. அவரது உடல்நிலையை மருத்துவர்கள் குழு தீவிரமாக கண்காணித்துவருகின்றனர்.
இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில், “இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் அவர்கள் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள செய்தியறிந்தவுடன், மருத்துவர்களைத் தொடர்புகொண்டு அவரது உடல்நலன் குறித்துக் கேட்டறிந்தேன்! அவர் நலமாக உள்ளதாகவும் விரைவில் வீடு திரும்புவார் என்றும் தெரிவித்தனர்! மகிழ்ச்சி!” எனக் குறிப்பிட்டுள்ளார்,
இதேபோல் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்,”உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் சார் விரைந்து பூரண நலம் பெற்று இல்லம் திரும்பிட விழைகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.