ரயிலை கவிழ்க்க சதி? தண்டவாளத்தில் வைக்கப்பட்ட கற்கள், இரும்பு போல்ட்!
Apr 28, 2025, 14:26 IST1745830576097
அரக்கோணம் அருகே ரயில் தண்டவாளத்தில் கற்கள், இரும்பு போல்ட் வைக்கப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பதி - பாண்டிச்சேரி எக்ஸ்பிரஸ் ரயில் அரக்கோணம் ரயில் நிலையம் அருகே வந்துகொண்டிருந்தது. இந்த நிலையில், அரக்கோணம் அருகே மேல்பாக்கம் வளைவு பகுதியில்
5 இடங்களில் தண்டவாளத்தில் கற்கள், இரும்பு போல்ட் வைக்கப்பட்டு இருந்தது. இது தொடர்பாக உடனடியாக ரயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்த நிலையில், ரயில்வே அதிகாரிகளுக்கு அவர்கள் உடனடியாக தகவல் தெரிவித்தனர். இதன் காரணமாக திருப்பதி - பாண்டிச்சேரி எக்ஸ்பிரஸ் ரயில் பாதி வழியில் நிறுத்தப்பட்டது.
சம்பவ இடத்தில் ரயில்வே போலீசார் மற்றும் ரயில்வே அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அங்கு வைக்கப்பட்டிருந்த கல் மற்றும் இரும்பு போல்ட் அகற்றப்பட்ட பின்னர் திருப்பதி - பாண்டிச்சேரி எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட்டு சென்றது. ரயிலை கவிழ்ப்பதற்கு சதியா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். உரிய நேரத்தில் தகவல் கிடைத்ததால்
திருப்பதி - பாண்டிச்சேரி எக்ஸ்பிரஸ் ரயில் தப்பியது.


