மீண்டும் தலைதூக்கும் பேனர் கலாச்சாரம்... ஸ்டாலினுக்கு அறப்போர் இயக்கம் சவால்!!

 
rajinikanth and cm stalin

தமிழகத்தில் கட்சி பேனர்களால் விபத்துக்கள் ஏற்பட்டு உயிரிழப்புகள் நிகழ்ந்த காரணத்தினால்,   கட்-அவுட் மற்றும் பேனர் கலாசாரத்திற்கு தடை விதிக்கப்பட்டது. அத்துடன் திமுக,  அதிமுக உள்ளிட்ட பிரதான கட்சிகள் பேனர் மற்றும் கட்அவுட்களை வைக்க வேண்டாம் என கட்சித் தொண்டர்களிடம் கேட்டுக்கொண்டனர்.  இந்த விவகாரத்தில் தலையிட்ட சென்னை உயர்நீதிமன்றம்,  தமிழகத்தில்  கட்-அவுட், பேனர்கள் வைக்க முற்றிலுமாக தடை விதித்து உத்தரவிட்டது. 

tn

ஆனால் தற்போது மீண்டும் தமிழகத்தில் ஆளும் கட்சியினரால் பேனர் கலாசாரம் தலைதூக்க ஆரம்பித்துவிட்டது.  சென்னை ராமாபுரத்தில் உள்ள அரசமரம் புவனேஸ்வரி கோவில் முன்பு முதல்வர் மு.க. ஸ்டாலின் புகைப்படம் கொண்ட பெரிய  கட்-அவுட் வைக்கப்பட்டிருந்தது . அதேபோல ஸ்டாலின் பிறந்த நாளை கொண்டாடும் வகையில் சென்னை வள்ளுவர்கோட்டம் பகுதியிலும்  கிட்டத்தட்ட 30 அடிக்கு மேல்  கட்-அவுட் வைக்கப்பட்டு,  மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டது. இந்த விவகாரம் தற்போது  சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

tn

இந்நிலையில் அறப்போர் இயக்கம் தனது ட்விட்டர் பக்கத்தில், "மக்களுக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் சாலையில் பேனர், கட்அவுட் வைக்க கூடாது என்று தமிழக முதல்வர் சொன்னது உண்மையாக இருந்தால் இந்த கட்அவுட் வைத்த  திமுக  பிரமுகர் மீது தமிழக காவல்துறையை வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க சொல்லுங்கள் பார்க்கலாம் என்று சவால் விட்டு பதிவிட்டுள்ளது.



அத்துடன் மற்றொரு பதிவில், "மேற்கு சைதாப்பேட்டை அரசு பள்ளி அருகே நடைபாதைகளில் திமுக  கொடி கம்பங்கள் நடப்பட்டுள்ளன. ஆளுங்கட்சி கொடி கம்பங்களை காவல்துறை  அனுமதிக்கும் பட்சத்தில் மற்ற கட்சிகள் கொடி வைப்பதை  அவர்கள் எப்படி தடுப்பார்கள்? விபத்து நடக்கும் வரை காத்திருக்கணுமா? " என்று கேள்வி எழுப்பியுள்ளது.