அமர்நாத் யாத்திரை போறீங்களா ? இன்று முதல் முன்பதிவு ஆரம்பம்..!

 
1

அமர்நாத் இறைவனை வழிபடுவதால், உங்களுக்கு ஏராளமான ஆரோக்கியம், பாதுகாப்பு, நேர்மையான வாழ்வு, ஆன்மீக வளர்ச்சி மற்றும் நீண்ட ஆயுளும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

ஜம்மு மற்றும் காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் இருந்து 141 கிமீ தொலைவில் 3,888 மீ உயரத்தில் இந்த குகை அமைந்துள்ளது. எல்லாப் பக்கங்களிலும் பனி மலைகளால் சூழப்பட்ட குகை இந்து மத அமைப்பில் ஒரு முக்கிய பங்கைக் கொண்டுள்ளது மற்றும் சிவபெருமானின் புனிதமான ஆலயங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.

குகைக்குள் 40 மீ உயரத்தில் உள்ள சிவலிங்கம் மூலம் இந்த குகை முக்கியத்துவம் பெறுகிறது. குகையின் மேற்கூரையில் இருந்து பனிக்கட்டி வடிந்ததால் உருவான ஸ்லாக்மைட் என அறிவியல் கூறினாலும், இந்துக்கள் இது லிங்க வடிவில் சிவபெருமான் இருப்பதாக உறுதியாக நம்புகின்றனர்

 

இந்த ஆண்டு ஜூன் 29 ஆம் தேதி அமர்நாத் யாத்திரை தொடங்குகிறது. இந்த யாத்திரை கால அட்டவணை குறித்து கோவில் நிர்வாகம் சமீபத்தில் அறிவித்துள்ளது. இந்த புனித பயணம் 52 நாட்கள் நடைபெறும். இதையொட்டி, பதிவு செய்யும் பணி திங்கள்கிழமை முதல் தொடங்குகிறது. ஆர்வமுள்ள பக்தர்கள் ஆஃப்லைன் மற்றும் ஆன்லைன் முறையில் பதிவு செய்யலாம். 13-70 வயதுடையவர்கள் மட்டுமே பயணத்திற்கு அனுமதிக்கப்படுகிறார்கள். மேலும் விவரங்களுக்கு www.jksab.nic.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.