பள்ளி மாணவர்களே ரெடியா ? 10-ம் தேதி தொடங்கும் அரையாண்டுத் தேர்வு - முழு பட்டியல் இதோ..!
டிட்வா புயலில் நகர்வு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் கடலோர மாவட்டங்களை கடந்து செல்லும்போது, மிக கனமழை முதல் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால், பல்வேறு பகுதிகளில் மழை பாதிப்புகள் ஏற்படலாம் என முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
டிசம்பர் 10-ம் தேதி முதல் தொடங்கி 23 வரை அரையாண்டுத் தேர்வு நடைபெறவுள்ளது. முதலில் 10, 11 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கு டிசம்பர் 10 முதல் 23 வரையும், 1 முதல் 9-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு டிசம்பர் 15 முதல் 23 வரை நடைபெறவுள்ளது.
இடையில், வார விடுமுறை மற்றும் தேர்விற்கு இடையேயான விடுமுறை வருகிறது.
அனைத்து வகுப்புகளுக்கும் தேர்வு முடிவடைந்து, டிசம்பர் 24-ம் தேதி முதல் அரையாண்டுத் தேர்வு விடுமுறை தொடங்குகிறது. தொடர்ந்து, மீண்டும் பள்ளிகள் ஜனவரி 5-ம் தேதி திறக்கப்படுகிறது. அதன்படி, மாணவர்களுக்கு மொத்தம் 12 நாட்கள் விடுமுறை கிடைக்கிறது. விடுமுறை நாட்களில் சொந்த ஊர்களுக்கு செல்வது, சுற்றுலா செல்வது, புத்தாண்டை கொண்டாட திட்டமிடுவது என மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் திட்டமிட்டு வருகின்றனர். டிசம்பர் மாதத்தில் முக்கிய பண்டிகைகளான கிறிஸ்துமஸ் மற்றும் ஆங்கில புத்தாண்டு பள்ளி அரையாண்டுத் தேர்வு விடுமுறை நாட்களில் வருகிறது. அதன்படி, டிசம்பர் மாதத்தின் பள்ளிகள் 17 நாட்களே செயல்படும்.
டிசம்பர் மாத பள்ளி அட்டவணை 2025:
டிசம்பர் 1 - பள்ளி வேலை நாள்
டிசம்பர் 2 - பள்ளி வேலை நாள்
டிசம்பர் 3 - பள்ளி வேலை நாள்
டிசம்பர் 4 - பள்ளி வேலை நாள்
டிசம்பர் 5 - பள்ளி வேலை நாள்
டிசம்பர் 6 - வார விடுமுறை
டிசம்பர் 7 - வார விடுமுறை
டிசம்பர் 8 - பள்ளி வேலை நாள்
டிசம்பர் 9 - பள்ளி வேலை நாள்
டிசம்பர் 10 - 10, 11, 12ஆம் வகுப்பு அரையாண்டுத் தேர்வு தொடக்கம், மனித உரிமைகள் தினம்
டிசம்பர் 11 - பள்ளி வேலை நாள், பாரதியார் பிறந்தநாள்
டிசம்பர் 12 - பள்ளி வேலை நாள்
டிசம்பர் 13 - வார விடுமுறை
டிசம்பர் 14 - வார விடுமுறை
டிசம்பர் 15 - 1 முதல் 9 வரை அரையாண்டுத் தேர்வு தொடக்கம்
டிசம்பர் 16 - பள்ளி வேலை நாள்
டிசம்பர் 17 - பள்ளி வேலை நாள்
டிசம்பர் 18 - பள்ளி வேலை நாள்
டிசம்பர் 19 - பள்ளி வேலை நாள்
டிசம்பர் 20 - வார விடுமுறை
டிசம்பர் 21 - வார விடுமுறை
டிசம்பர் 22 - பள்ளி வேலை நாள், சீனிவாச ராமானுஜன் பிறந்தநாள்
டிசம்பர் 23 - அரையாண்டுத் தேர்வு நிறைவு
டிசம்பர் 24 - விடுமுறை தொடக்கம்
டிசம்பர் 25 - கிறிஸ்துமஸ் பண்டிகை (அரசு விடுமுறை)
டிசம்பர் 26 - பள்ளி விடுமுறை
டிசம்பர் 27 - பள்ளி விடுமுறை
டிசம்பர் 28 - பள்ளி விடுமுறை
டிசம்பர் 29 -பள்ளி விடுமுறை
டிசம்பர் 30 - பள்ளி விடுமுறை
டிசம்பர் 31 -பள்ளி விடுமுறை


