12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவில் அரியலூர் மாவட்டம் முதலிடம்!

 
ariyalur ariyalur

12ம் வகுப்பு பொதுத்தேர்வு தேர்ச்சி விகிதத்தில் அரியலூர் மாவட்டம் முதல் இடம் பிடித்துள்ளது.

தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் கடந்த மார்ச் மாதம் 03ம் தேதி தொடங்கி 25ம் தேதி வரை நடைபெற்றது. மொத்தம் 7.92 லட்சம் மாணவர்கள் தேர்வை எழுதினர். இதில் 4.19 லட்சம் மாணவிகளும், 3.73 லட்சம் மாணவர்களும் தேர்வு எழுதினர். 10,049 பேர் தேர்வை எழுதவில்லை. இந்த நிலையில், மாணவர்கள் ஆவலுடன் எதிர்ப்பார்த்து காத்திருந்த தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. பொதுத்தேர்வை எழுதிய மாணவர்களில் 95.03 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களை விட மாணவிகளே அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர். 4.05 லட்சம் மாணவிகளும், 3.47 லட்சம் மாணவர்களும் தேர்ச்சி அடைந்துள்ளனர்.  

இந்த நிலையில், 12ம் வகுப்பு பொதுத்தேர்வு தேர்ச்சி விகிதத்தில் அரியலூர் மாவட்டம் முதல் இடம் பிடித்துள்ளது. அரியலூர் மாவட்டம் 98.82% தேர்ச்சியுடன் முதலிடம் பிடித்துள்ளது. அடுத்தபடியாக ஈரோடு மாவட்டம் 97.98% தேர்ச்சி பெற்றுள்ளது. திருப்பூர் 97.53 சதவீதமும், கோயம்புத்தூர் 97.48 சதவீதமும், கன்னியாகுமரி 97.01 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளன.