"நான் தலைமறைவாகவில்லை; ஹைதராபாத்தில் படப்பிடிப்பில் இருந்தேன்"- கஸ்தூரி

 
s

நான் தலைமறைவாகவில்லை, ஹைதராபாத்தில் படப்பிடிப்பில் இருந்தேன் என கைதாவதற்கு முன் நடிகை கஸ்தூரி வெளியிட்ட வீடியோவை, இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம் ஒன்றில் தெலுங்கு மக்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த நடிகை கஸ்தூரிக்கு எதிராக பல்வேறு புகார்கள் குவிந்தன. இந்த புகார்களின் பேரில் சென்னை, மதுரை திருச்சி உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களில் நடிகை கஸ்தூரி மீது இரு தரப்பினரிடையே மோதல் உண்டாக்குதல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. சென்னையில் உள்ள வீட்டில் நடிகை கஸ்தூரிக்கு சம்மன் அளிக்க சென்ற போது அவரது வீடு பூட்டப்பட்டு செல்போனும் சுவிட்ச் ஆஃப் ஆகி இருந்ததை தொடர்ந்து சென்னை பெருநகர காவல் துறை சார்பில் இரண்டு தனிப்படைகள் அமைத்து நடிகை கஸ்தூரி தீவிரமாக தேடப்பட்டு வந்தார். நேற்று ஐதராபாத்தில் இயக்குனர் ஒருவரது வீட்டில் பதுங்கி இருந்த நடிகை கஸ்தூரியை சென்னை தனிப்படை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். 



இந்நிலையில் சென்னை வருவதற்கு முன் நடிகை கஸ்தூரி வெளியிட்ட வீடியோவில், “வணக்கம். நான் எழும்பூர் காவல்நிலைய போலீசார் கஸ்டடியில் எடுத்துள்ளனர். "நான் தலைமறைவாகவில்லை, ஹைதராபாத்தில் படப்பிடிப்பில் இருந்தேன். நேற்று படப்பிடிப்பு முடிந்துவந்த என்னை கைது செய்தனர். மிகவும் மன உளைச்சலில் இருந்ததால் எனது வழக்கறிஞர் என் போனை வாங்கிக்கொண்டார். ஆகவே போலீசாரின் அழைப்பை ஏற்கமுடியவில்லை” எனக் குறிப்பிட்டுள்ளார்.