ஷமி, வைஷாலிக்கு அர்ஜுனா விருது - தமிழச்சி எம்.பி., வாழ்த்து

 
tn

அர்ஜுனா விருது பெற்றுள்ள பெண் கிராண்ட் மாஸ்டர் ஆர்.வைஷாலிக்கு எம்.பி., தமிழச்சி வாழ்த்து கூறியுள்ளார்.

yn

இதுதொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் தனது சமூகவலைத்தளத்தில், 2023 ஆம் ஆண்டிற்கான அர்ஜுனா விருது பெற்றுள்ள, தமிழ்நாட்டின் முதல் பெண் கிராண்ட் மாஸ்டர் ஆர்.வைஷாலி,  துரோணாச்சார்யா விருது பெற்றுள்ள ஆர். பி. ரமேஷ்,  விளையாட்டு மற்றும் போட்டிகள் பிரிவில் வாழ்நாள் சாதனைக்கான தியான் சந்த் விருது வென்றிருக்கும், மூத்த கபடி வீராங்கனை மற்றும் இந்திய மகளிர் கபடி அணியின் பயிற்சியாளர் கவிதா செல்வராஜ் ஆகியோருக்கு  பாராட்டுகளும்,  வாழ்த்துகளும்.  2023 ஆம் ஆண்டிற்கான அர்ஜுனா விருது பெற்றுள்ள அனைவருக்கும் என் வாழ்த்துகள்.


உங்களின் ஒவ்வொரு நகர்வும், நாட்டின் பெருமைக்கான அடிகள் !! என்று குறிப்பிட்டுள்ளார்.