“ஆபாச காதலர் தின காம வெறியாட்டங்களை தடுப்போம்”- அர்ஜூன் சம்பத்
தமிழகத்தில் - சட்டம் ஒழுங்கு மற்றும் கலாச்சார பண்பாட்டு சீரழிவை ஏற்படுத்தும் காதலர் தின (வாலன்டைன் டே) கொண்டாட்டங்களை தடை செய்ய வேண்டும் என தமிழக டிஜிபியிடம் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் மனு அளித்துள்ளார்.
இதுதொடர்பாக அர்ஜூன் சம்பத் அளித்த மனுவில், “தமிழர் பண்பாட்டிற்கும் கலாச்சாரத்திற்கும் தொடர்பில்லாமல் சமீபகாலமாக காதலர் தினம் (வேலண்டைன் டே) எனும் பெயரில் இளைஞர் மற்றும் மாணவர் சமூகத்தை கெடுக்கும் கொண்டாட்டங்கள் நடைபெறுகின்றன.
பொது இடங்களில் மது அருந்துதல், ஆபாசமாக நடந்து கொள்ளுதல். பெண்களை கேலி செய்தல், உள்ளிட்ட சட்ட விரோத காரியங்களும் பரவலாக நடைபெருகின்றன.
எனவே தமிழகம் முழுக்க காதலர் தின கொண்டாட்டங்களை தடை செய்வதோடு பின்வரும் கோரிக்கைகளை ஏற்று உரிய உத்திரவுகளை பிறப்பிக்கும் படி வேண்டுகிறோம்.
•நட்சத்திர விடுதிகளில் மது அருந்தி ஆபாச நடனம் உள்ளிட்ட பண்பாட்டு சீரழிவு நிகழ்ச்சிகளையும்
•தனியார் மற்றும் அரசு தொலைக்காட்சிகளில் காதலர் தின சிறப்பு நிகழ்ச்சி எனும் பெயரில் ஆபாச நிகச்சிகளை நடத்துவதையும்
•தனியார் பண்பலை வானொலி மூலம் காதலை வெளிப்படுத்துகிறோம் எனும் பெயரில் சம்மந்தமில்லாமல் வீடுகளுக்கு போன் செய்து குடும்பத்தில் குழப்பங்கள் ஏற்படுத்துகிற செயலையும்
•செல்போனில் ஆபாச எஸ்.எம்.எஸ் மற்றும் மின்னஞ்சல் மூலம் ஆபாச செய்தி - படங்கள் பரிமாறுகிறது, ஆபாச வாழ்த்து அட்டை ஆகியவை அனுப்புவது போற்ற அருவறுக்கத்தக்க செயல்களையும்
•பொது இடங்களில் பெண்களை கேலி செய்து பிரச்சனைகளை ஏற்படுத்துவது உள்ளிட்ட காரியங்களை தடைசெய்ய வேண்டுகிறோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்,

