#BREAKING ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்! 6 மாதங்களில் குற்றப்பத்திரிக்கை

 
ஆம்ஸ்ட்ராங் கொலை : அஸ்வத்தாமனிடம் கிடுக்குப்பிடி விசாரணை.. காவல்துறை கேட்பது என்ன? ஆம்ஸ்ட்ராங் கொலை : அஸ்வத்தாமனிடம் கிடுக்குப்பிடி விசாரணை.. காவல்துறை கேட்பது என்ன?

பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐ விசாரணைக்கு  மாற்றி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

armstrong death

பகுஜன் சமாஜ் கட்சி தமிழக தலைவர் ஆம்ஸ்ட்ராங், 2024 ஆம் ஆண்டு  ஜூலை 5ஆம் தேதி  கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் இதுவரை 27 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கு, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. இந்த வழக்கின் விசாரணையை சிபிஐ-க்கு மாற்றக் கோரி, ஆம்ஸ்ட்ராங்-கின் சகோதரர் கீனோஸ் ஆம்ஸ்ட்ராங் தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பு தள்ளிவைக்கப்பட்டுள்ள நிலையில், ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடியும், வழக்கை சிபிஐ- க்கு மாற்றக் கோரி மனுத்தாக்கல் செய்திருக்கிறார். அந்த மனுவில், வழக்கில் காவல் துறையினர் முறையாக விசாரணை நடத்தவில்லை எனவும், முக்கியமான சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்படவில்லை எனவும் கூறப்பட்டுள்ளது.

ஆம்ஸ்ட்ராங் கொலையில் உள்ள அரசியல் தொடர்பு குறித்து விசாரிக்கப்படவில்லை எனவும், இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நாகேந்திரனுடன் நெருக்கமான செல்வப்பெருந்தகையிடம் விசாரணை நடத்தவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட திருவேங்கடம் என்பவர்  என்கவுண்டர் செய்யப்பட்டது குறித்து விசாரிக்கப்படவில்லை எனவும், உண்மையை வெளிக்கொண்டு வராமல் அவசரமாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.  ஆளுங்கட்சியைச் சேர்ந்த தலைவர்கள், விசாரணையில் தலையிட்டுள்ளதால், குற்றப்பத்திரிகையை ரத்து செய்து, மீண்டும் விசாரணை நடத்த சிபிஐ-க்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரப்பட்டுள்ளது.

வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள், ரவுடிகள் என்பதால் சாட்சிகளுக்கு பாதுகாப்பு வழங்க உத்தரவிட வேண்டும் எனவும் கோரிக்கை முன் வைக்கப்பட்டுள்ளது.இந்த வழக்கின் விசாரணை நீதிபதி வேல்முருகன் முன்பு நடைபெற்றது. காவல்துறை தரப்பில், 27 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் போட்டுள்ளதாகவும்,விசாரணை நிலுவையில் உள்ளதால் சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கூடாது என தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதி வேல்முருகன், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு விசாரணையை சிபிஐக்கு மாற்றி உத்தரவிட்டார். விசாரணை ஆவணங்களை சிபிஐ வசம் ஒப்படைக்க உத்தரவிட்ட நீதிபதி, 6 மாத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என அறிவுறித்தியுள்ளார்.