”எல்லா புகழும் இறைவனுக்கே”... ஹாலிவுட் இசை விருது வென்ற ஏ.ஆர்.ரகுமான்
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானுக்கு ஹாலிவுட் இசை விருது வழங்கப்பட்டது.
நடிகர் பிருத்விராஜ் சுகுமாறன் நடிப்பில் இயக்குநர் பிளெஸ்ஸி இயக்கத்தில் மலையாளத்தில் வெளியான திரைப்படம் ஆடுஜீவிதம். ஆடு ஜீவிதம் நாவலினைத் தழுவி எடுக்கப்பட்ட இப்படம் கோட் லைஃப் என்ற பெயரில் மற்ற மொழிகளில் இந்தப் படம் ரிலீஸ் ஆனது. கடந்த மார்ச் மாதம் 28-ஆம் தேதி உலகம் முழுவதும் திரைக்கு வந்த இப்படத்தின் நாயகியாக அமலாபால் நடித்திருந்தார். மேலும் இப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர். ரகுமான் இசை அமைத்துள்ளார்.
ஆடுஜீவிதம் படத்தின் பாடல்கள் மற்றும் பின்னணி இசை பெரும்பாலும் பாராட்டப்பட்ட நிலையில், படத்திற்காக HMMA விருதினை ஏ.ஆர். ரகுமான் வென்றுள்ளார். ஹாலிவுட் மியூசிக் மிடியா விருது எனப்படும் HMMA விருது ஆடுஜீவிதம்படத்தின் பின்னணி இசைக்கு வழங்கப்பட்டுள்ளது. வெளிநாட்டுப் படங்களின் பிரிவில் இந்தப் படத்திற்கு விருது வழங்கப்பட்டுள்ளது. இந்திய சினிமாவில் HMMA விருதை பெரும் முதல் விருதாளர் ஏ.ஆர்.ரகுமான் என்பது குறிப்பிடதக்கது. HMMA விருதை ஏ.ஆர்.ரகுமான் சார்பாக ஆடுஜீவிதம் படத்தின் இயக்குநர் பெற்றுக்கொண்டார். உலகெங்கிலும் உள்ள ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ள ஏ.ஆர்.ரகுமான், எல்லா புகழும் இறைவனுக்கே என தனக்கே உரிதான தன்னடக்கத்துடன் கருத்து தெரிவித்துள்ளார்.