ஏ.ஆர்.ரகுமானை பிரிந்தது ஏன்? - சாய்ரா பானு விளக்கம்

 
rahman

கடந்த 2 மாதமாக உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்று வருகிறேன் என ஏ.ஆர்.ரகுமானின் மனைவி சாய்ரா பானு விளக்கம் அளித்துள்ளார்.

ஏ.ஆர்.ரகுமானுடனான விவகாரத்து குறித்து ஆடியோ வெளியிட்டுள்ள ஏ.ஆர்.ரகுமானின் மனைவி சாய்ரா பானு, “உலகிலேயே மிகச்சிறந்த மனிதர் ஏ.ஆர்.ரகுமான். அவரைபோல ஒரு அற்புதமான மனிதரை பார்க்க முடியாது. கடந்த சில மாதங்களாக எனக்கு உடல்நிலை சரியில்லை. கடந்த 2 மாதமாக உடல்நலக்குறைவால் மும்பையில் தங்கி சிகிச்சை பெற்று வருகிறேன். எனது உடல்நல கோளாறு யாருக்கும் பிரச்சினையாக இருந்துவிட கூடாது. எனது உடல்நிலையால் ஏ.ஆர்.ரகுமானின் பணிகள் பாதிக்கப்பட்டு விட கூடாது என்பதற்காக பிரிந்து வாழ முடிவெடுத்தேன்


எங்கள் பிரிவு குறித்து யாரும் தவறான, கீழ்தரமான கருத்துக்களை பரப்ப வேண்டாம். எங்கள் இருவருக்கும் தற்காலிகமாக ஒரு இடைவெளி தேவைப்பட்டதால் பிரிந்து இருக்கிறோம். எதையும் நாங்கள் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதும் விரைவில் சென்னை திரும்புவேன். தயவு செய்து அவர் பெயருக்கு யாரும் களங்கம் ஏற்படுத்தாதீர்கள்” எனக் கூறியுள்ளார்.