தவெக கல்வி விருது விழாவில் தொழுகை செய்ய இடம் ஏற்பாடு!

 
ச் ச்

தமிழக வெற்றி கழகத்தின் மூன்றாவது கட்ட கல்வி விருதுகள் வழங்கும் விழா செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெறுகிறது.

கல்வி விருதுகள் வழங்கும் விழா இரண்டு கட்டமாக வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்ட நிலையில், மூன்றாவது கட்டமாக இன்று நடைபெறுகிறது. தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் இன்று காலை 10-மணிக்கு தொகுதி வாரியாக சிறந்த மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ் மற்றும் ஊக்கத்தொகை வழங்குகிறார். இன்று தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலத்தில் 51 சட்டமன்ற தொகுதிகளை சேர்ந்த மாணவ மாணவிகளுக்கு கல்வி விருதுகள் வழங்கப்படுகிறது. 


விழாவில் கலந்து கொள்ள வந்த இஸ்லாமியர்கள் தொழுகை செய்ய தமிழக வெற்றி கழகம் ஏற்பாடு செய்துள்ளது. உணவு அரங்கத்தில் ஒரு பகுதியில் தொழுகை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அந்த இடத்தில் 20-க்கும் மேற்பட்ட இஸ்லாமிய சமுதாயத்தினர் தொழுகையில் ஈடுபட்டு வருகின்றனர். பொதுவாக வெள்ளிக்கிழமை மதியம் இஸ்லாமியர்கள் தொழுகை செய்வது குறிப்பிடத்தக்கது.