மு.க.முத்து உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்த ஏற்பாடு!

 
ச் ச்

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் மூத்த மகனும், முதல்வர் ஸ்டாலினின் சகோதரருமான மு.க.முத்து உடல் நலக்குறைவால் காலமானார்.

Image

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் சகோதரர் மு.க.முத்து வயது மூப்பின் காரணமாக காலமானதையொட்டி, அவரது உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் சென்னை கோபாலபுரம் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் கழக உடன்பிறப்புகள் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர். கோபாலபுரத்தில் வைக்கப்பட்டுள்ள மு.க.முத்து உடலுக்கு கவிஞர் வைரமுத்து அஞ்சலி செலுத்தினர். சென்னை கோபாலபுரம் இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.