மறுமணம் செய்வதாக கூறி விதவை பெண்ணிடமிருந்து ரூ.7 லட்சத்தை சுருட்டிய போலீஸ்

 
மோசடி

காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறில், விதவை பெண்ணை மறு திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தைகள் கூறி ரூ.7 லட்சத்து 50 ஆயிரம் ஏமாற்றிய காவலரை போலீசார் கைது செய்தனர். 

திருமண ஆசை காட்டி விதவை பெண்ணிடம் ரூ.7.5 லட்சம் மோசடி : போலீஸ்காரர் கைது |  Dinamalar Tamil News

காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறு அடுத்த கீழ சுப்பராயபுரம் பகுதியை சேர்ந்தவர் சுதா(39). இவருக்கு திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன் சுதாவின் கணவர் இறந்துவிட்டார். குடும்ப பாரத்திற்காக சுதா, திருநள்ளாறு மார்க்கெட்டில் உள்ள காய்கறி கடை ஒன்றில் வேலைச் செய்து வருகிறார். அப்போது கடையில் பொருட்கள் வாங்க வந்த, செருமாவிலங்கை பகுதியை சேர்ந்தவரும் புதுச்சேரி காவல் துறை காரைக்காலில் பணிபுரியும் காவலருமான குணசேகரன்(42) என்பவர், சுதாவிடம் நட்பாக பழகி வந்தார். 

காவலர் குணசேகரன் ஏற்கனவே திருமணம் ஆகி விவாகரத்தானவர் ஆவர். நாளடைவில் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி, சுதாவுடன் காவலர் குணசேகரன் உல்லாசமாக இருந்து உள்ளார். பின்னர் தான் பெரும் கடன் சுமையில் இருப்பதாகவும் வங்கியில் ரூ.10 லட்சம் கடன் வாங்கி கொடுத்தால், உன்னை திருமணம் செய்து கொள்வதாக குணசேகரன் சுதாவிடம் கூறினார். இதனை நம்பிய சுதா, தனது 7 சவரன் தங்க நகையை அடமானம் வைத்தும், சுய உதவிக்குழு மற்றும் வங்கிகள் மூலம் சுமார் ரூ.7 லட்சத்து 50 ஆயிரம் பணத்தை குணசேகரனிடம் கொடுத்ததார்.

பின்னர் திருமணம் குறித்து குணசேகரிடன் சுதா கேட்டபோது, திருமணம் செய்துகொள்ள முடியாது என்றும் எனக்கு ஏற்கனவே திருமணம் ஆகி விட்டது என தெரிவித்துள்ளார். மேலும் திருமணம் தொடர்பாக மற்றும் பணத்தை திருப்பி கேட்டால் கொலை செய்து விடுவேன் என மிரட்டி உள்ளார். இதுகுறித்து சுதா திருநள்ளாறு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதன் பேரில் வழக்கு பதிவு செய்த திருநள்ளாறு காவல் ஆய்வாளர் அறிவிச்செல்வன், காவலர் குணசேகரனை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

முதற்கட்ட விசாரணையில் இதே போல் 4 பெண்களிடம் காவலர் குணசேகரன் பழகி, பணம் ஏமாற்றி இருப்பது தெரிய வந்தது. தன்னை தப்பிக்க விட்டால், ரூ. 50 ஆயிரம் லஞ்சம் தருவதாக திருநள்ளாறு போலீசாரிடம் குணசேகரன் பேரம் பேசியது குறிப்பிடத்தக்கது.