ஜூன் 3ல் திருவாரூரில் கலைஞர் நூற்றாண்டு விழா.. - மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம்..

 
stalin

கலைஞர் நூற்றாண்டு விழாவை ஓராண்டு கொண்டாடவும், ஜூன் 3ம் தேதி நூற்றாண்டு விழா தொடக்க மாநாடு நடத்தவும்  திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.  

ஒவ்வொரு முறை சட்டமன்றம் கூடும் போதும் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடத்தப்படுவது வழக்கமான ஒன்று .  அந்த வகையில் நேற்று  சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றதை  தொடர்ந்து இன்று திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் கலைஞர் அரங்கில்  நடைபெற்றது.  இந்த மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் திமுக தலைவரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை ஏற்றுள்ளார். இந்த கூட்டத்தில் கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு,  துணை பொதுச்செயலாளர்கள் ஐ.பெரியசாமி, க. பொன்முடி , ஆ.ராசா உள்ளிட்ட மூத்த மற்றும் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டுள்ளனர்.

ஜூன் 3ல் திருவாரூரில் கலைஞர் நூற்றாண்டு விழா.. - மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம்..

அமைச்சர்களாக இருக்கக்கூடிய மாவட்ட செயலாளர்களும்,  சட்டமன்ற உறுப்பினர்களாக இருக்கக்கூடிய மாவட்ட செயலாளர்கள்  என 74 மாவட்ட செயலாளர்களும் இந்த கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர். மாவட்ட செயலாளர் கூட்டம் என்றால் கட்சியின் செயல்பாடு குறித்த முக்கிய முடிவுகள் எடுக்கப்படும்.  அந்த வகையில் இந்தக்  கூட்டத்தில் ஒரே ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.  அந்த தீர்மானத்தில் கலைஞரின் பிறந்த தினம் ஜூன் 3ம் தேதி கொண்டாடப்பட உள்ளது.    இந்த ஆண்டு அவரது 99வது  பிறந்தநாள் என்பதால்  இந்த  ஜூன் 3ம் தேதி முதல் அடுத்த ஆண்டு ஜூன் 3ம் தேதி வரை ஓராண்டு முழுவதும் நூற்றாண்டு விழாவாக சிறப்பாக கொண்டாட வேண்டும் என முக்கிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

கட்சியின் சரித்திர நாயகன்! பழுத்த அரசியல்வாதி!! கலையுலகின் ஜாம்பவான்!! இதுவே கலைஞர்… 

இந்த நூற்றாண்டு விழாவானது இந்தியாவே திரும்பி பார்க்கக் கூடிய வகையில் மிகப்பெரிய விழாவாக  கொண்டாட திட்டமிடப்பட்டுள்ளது.  அதில் ஆடம்பரங்களுக்கு முக்கியத்துவம் இல்லாமல் மக்கள் நலன் சார்ந்த திட்டங்கள் அடங்கிய நூற்றாண்டு விழாவாக இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.   கலைஞர் பிறந்த ஊரான திருவாரூரில் ஜூன் 3ம் தேதி கலைஞர் நூற்றாண்டு தொடக்க விழா மாநாடு நடைபெற உள்ளது.   திருவாரூரில் தயாளு அம்மாள் அறக்கட்டளை சார்பில் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் கோட்டம் அருங்காட்சியகத்தை, இந்திய தலைவர்கள் திறந்து வைக்க உள்ளனர். அதேபோல்  தொடக்க விழா மாநாட்டில் காலையில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி தலைவர்கள் உரையாற்ற உள்ளனர்.  மாலையில் அகில இந்திய தலைவர்கள் பங்கேற்று உரையாற்ற உள்ளனர்.

அதேபோல்   கட்சியில் ஏற்கனவே ஒரு கோடி உறுப்பினர்கள் இருக்கும் நிலையில்,  திமுகவை மேலும் வலுப்படுத்த மேலும் ஒரு கோடி உறுப்பினர்களை சேர்க்கும் மாபெரும் முன்னெடுப்பு தொடங்கப்பட்டுள்ளது.   ஏப்ரல்3ம் தேதி இந்த திட்டம் தொடங்கப்பட்டு கலைஞர் பிறந்த நாளான   ஜூன் 3ம் தேதிக்குள் நிறைவேற்றிட தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஒரு கோடி உறுப்பினர்களை திமுகவில் சேர்க்கும்  தீர்மானத்தில் முதலமைச்சரே கையெழுத்திட்டு தொடங்கி  வைப்பார் என்றும் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது.