கலைஞர் சிலை, சேலத்தில் ஈரடுக்கு பேருந்து நிலையத்தை திறந்து வைத்த முதல்வர்..

 
கலைஞர் சிலை, சேலத்தில் ஈரடுக்கு பேருந்து நிலையத்தை திறந்து வைத்த முதல்வர்..


சேலத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு புதிய மற்றும் புனரமைக்கப்பட்ட திட்டங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்திருக்கிறார்.

சேலத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக 3 நாள் பயணமாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று சேலத்திற்கு வந்திருந்தார். நேற்று மாலை சேலம் மாவட்ட திமுக  சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர்,  இன்று காலை முதல் அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார்.  அதன்படி,  சேலம் அண்ணா பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள 16 அடி உயர கலைஞரின் வெண்கல சிலையை  முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து சேலத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் முடிவற்ற பல்வேறு திட்ட பணிகளை அவர் திறந்து வைத்திருக்கிறார்.

 குறிப்பாக சேலத்தில் 2.76 ஏக்கர் நிலப்பரப்பில் ரூ.96 கோடியில்  மறு சீரமைக்கப்பட்ட ஈரடுக்கு பேருந்து நிலையத்தின் கட்டிடத்தை ரிப்பன் வெட்டியும்,  அதன் பேருந்து சேவையை கொடியசைத்தும் தொடக்கி வைத்தார்.  குறிப்பாக இந்த பேருந்து நிலையத்தில் தரைதளத்தில் 25 பேருந்துகளும்,  முதல் தளத்தில் 27 பேருந்துகளும் என மொத்தம் 52 பேருந்துகள் ஒரே நேரத்தில் நிறுத்தி வைக்கக்கூடிய வகையிலும்,  நாள்தோறும் 430 பேருந்துகள் வந்து செல்லக் கூடிய வகையிலும்  கட்டப்பட்டுள்ளது. இந்த பேருந்து நிலையத்திற்கு கலைஞர் நூற்றாண்டு மாநகர பேருந்து நிலையம் என பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது.   

கலைஞர் சிலை, சேலத்தில் ஈரடுக்கு பேருந்து நிலையத்தை திறந்து வைத்த முதல்வர்..

அதுமட்டுமின்றி ரூ. 19.71 கோடியில் மறு சீரமைக்கப்பட்டுள்ள பெரியார் பேரங்காடி கட்டிடத்தையும் முதல்வர் திறந்து வைத்திருக்கிறார். அதேபோன்று ரூ.10.58 கோடி  மதிப்பீட்டில் மறுசீரமைக்கப்பட்ட கோல்ப் மைதானம்,  ரூ.14.97 கோடியில் மறுசீரமைக்கப்பட்ட வ.உ.சி மார்க்கெட், ரூ. 33.63 கோடியில் கட்டப்பட்ட நேரு கலையரங்கம் ஆகிய கட்டிடங்களையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தற்போது திறந்து வைத்திருக்கிறார்.  மேலும் அரசு பொறியியல் கல்லூரியில் நடைபெறும் நிகழ்ச்சியில் பலந்துகொண்டு,  பல அரசு நலத்திட்ட உதவிகளை வழங்க இருக்கிறார்.   அரசு பொறியியல் கல்லூரியில் நடைபெறக்கூடிய அரசு நிகழ்ச்சிகளில்,  ரூ37.38 கோடி மதிப்பிலான புதிய பேருந்து நிலையம்,  தொங்கும் பூங்கா,  பல்நோக்கு அரங்க வளாகம்,  பள்ளப்பட்டி ஏரி புனரமைத்தல்,  நமக்கு நாமே திட்டத்தில் புதிய வகுப்பறை கட்டிடங்கள்,  நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம்,  கோடிநாயக்கன்பட்டி , ,மூக்கனேரி ஏரி, அத்திப்பட்டு ஏரிகள் புனரமைப்பு  என சுமார் 1,367 கோடி ரூபாய் மதிப்பிலான 390 முடிவுற்ற பணிகளை அவர் தொடங்கி வைக்க இருக்கின்றார்.

மேலும்,  ரூ. 235 கோடி மதிப்பிலான 331 புதிய திட்டங்களுக்கும் அவர் அடிக்கல் நாட்ட  இருக்கிறார்.  அது மட்டும் இல்லாமல் 50,202 பயனாளிகளுக்கு 170 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு துறைகளிலின் சார்பில் நலத்திட்ட உதவிகளையும் முதலமைச்சர் வழங்குகிறார்.  இது போன்ற அடுத்த அடுத்த அரசின் பல்வேறு நலத்திட்ட நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்கும் முதல்வர்,  இந்த நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு  இன்று மாலை மேட்டூர் செல்ல இருக்கிறார். நாளை 12ம் தேதி காலை மேட்டூர் அணையிலிருந்து டெல்டா பாசனத்திற்காக காவிரியில்  தண்ணீர் திறந்து விடும் நிகழ்ச்சியில் பங்கே இருக்கிறார்.  முதல்வரின் இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள்  துரைமுருகன்,  கே.என்.நேரு,  எம்.ஆர்.கே பன்னீர்செல்வம்,  ரகுபதி,  மதிவேந்தன்  உள்ளிட்டோர் பங்கேற்று உள்ளனர்.