அரும்பாக்கம் மெட்ரோ இரயில் நிலையத்தில் தற்காலிகமாக சேவை நிறுத்தம்!!

 
b

அரும்பாக்கம் மெட்ரோ இரயில் நிலையத்தின் மேற்கூரையில் அவசர பராமரிப்பு பணி காரணமாக பச்சை வழித்தடத்தில் 3 மெட்ரோ இரயில் நிலையங்களுக்கு தற்காலிகமாக மெட்ரோ இரயில் சேவை நிறுத்தப்பட்டுள்ளது.

metro
இதுதொடர்பாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் , பச்சை வழித்தடத்தில், அரும்பாக்கம் மெட்ரோ இரயில் நிலையத்தில் மேற்கூரையில் அவசர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் இன்று (29.11.2023) மதியம் 1:45 மணி முதல் 2.15 மணி வரை வடபழனி, அரும்பாக்கம் மற்றும் புரட்சித்தலைவி டாக்டர். ஜெ.ஜெயலலிதா புறநகர்ப் பேருந்து நிலைய மெட்ரோ இரயில் நிலையங்களில் தற்காலிகமாக மெட்ரோ இரயில் சேவை நிறுத்தப்பட்டுள்ளது.

gn

பச்சை வழித்தடத்தில், புரட்சித்தலைவர் டாக்டர்.எம்.ஜி.ராமச்சந்திரன் சென்ட்ரல் மெட்ரோ இரயில் நிலையத்திலிருந்து கீழ்ப்பாக்கம், அண்ணா நகர் வழியாக விமான நிலையம் வரை செல்லும் மெட்ரோ இரயில் சேவைகள் தற்காலிகமாக கோயம்பேடு மெட்ரோ இரயில் நிலையம் வரை இயக்கப்படும். அதேபோல், பரங்கி மலை மற்றும் விமான நிலையம் மெட்ரோ இரயில் நிலையத்திலிருந்து சென்ட்ரல் செல்லும் மெட்ரோ இரயில் சேவை தற்காலிகமாக அசோக் நகர் மெட்ரோ இரயில் நிலையம் வரை இயக்கப்படும்.



 
பரங்கி மலை மெட்ரோ நிலையத்திற்கு செல்லும் பயணிகள் நீலவழித்தடத்தில்  அறிஞர் அண்ணா ஆலந்தூர் மெட்ரோ இரயில் நிலையத்திற்கு சென்று  மாறி செல்லுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.அரும்பாக்கம் மெட்ரோ இரயில் நிலையத்தில் அவசர பராமரிப்பு பணிகளை பணியாளர்கள் சரிசெய்யும் பணியில் துரிதமாக ஈடுப்பட்டுள்ளனர். பராமரிப்பு பணிகள் வெகுவிரைவில் சரிசெய்யப்பட்டு மெட்ரோ இரயில்கள் வழக்கம்போல் இயக்கப்படும்.நீல வழித்தடத்தில் மெட்ரோ இரயில்கள் வழக்கம் போல் இயக்கப்பட்டு வருகிறது.மெட்ரோ இரயில் பயணிகளுக்கு ஏற்பட்ட இந்த எதிர்பாராத திடீர் தடங்கல்களுக்கு சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் வருந்துகிறது.என்று குறிப்பிட்டுள்ளது.