ஆருத்ரா மோசடி வழக்கு - துபாயில் ரூ.500 கோடி பதுக்கியது அம்பலம்

 
பணம்

ஆருத்ரா மோசடி வழக்கில் ரூ.500 கோடி வரை துபாய் நாட்டில் அந்நிறுவனத்தின் இயக்குனர்கள் பதுக்கி வைத்திருப்பதாக பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர்

ஆருத்ரா கோல்டு நிறுவனம் முதலீட்டாளர்களுக்கு 25 முதல் 30 சதவீதம் வரை வட்டி எனக்கூறி சுமார் ஒரு லட்சம் முதலீட்டாளர்களிடமிருந்து ரூ.2438 கோடி மோசடி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  இது தொடர்பாக முதலீட்டாளர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் பொருளாதார குற்றப்பிரிவு தடுப்பு பிரிவு போலீசார் 21 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில் தயாரிப்பாளர் மற்றும் பாஜக ஓபிசி பிரிவு துணைத் தலைவராக உள்ள ஆர்.கே. சுரேஷுக்கு ஆருத்ரா மோசடியில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. ஆருத்ரா கோல்டு  ட்ரேடிங் மோசடி விவகாரத்தில் நடிகர் ஆர்.கே. சுரேஷ் ரூபாய் 15 கோடி வாங்கியது அம்பலமானது.   

இந்த நிலையில், ஆருத்ரா மோசடி வழக்கில் ரூ.500 கோடி வரை துபாய் நாட்டில் இயக்குனர்கள் பதுக்கி வைத்திருப்பதாக பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர். சொத்துகளை முடக்க துபாய் அரசுடன் எம் லாட் ஒப்பந்தம் போடப்பட்டுள்ள நிலையில், அதை உடனடியாக அமல்படுத்த மீண்டும் கடிதம் அனுப்பியுள்ளனர். துபாயில் 500 கோடி பதுக்கப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள முதலீட்டாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.