என் உயிர் மூச்சு உள்ளவரை தவெகவிற்கு பணியாற்றுவேன் - செங்கோட்டையன்..!!

 
Q Q
கோவையில் செய்தியாளர் சந்திப்பில் செங்கோட்டையன் கூறியதாவது:-
என்னை வரவேற்ற தொண்டர்களுக்கு நன்றி.புனித ஆட்சியை தமிழகத்தில் இடம்பெற வைக்க விஜய் புறப்பட்டுள்ளார். அந்த வழியில் நானும் பயணிக்கிறேன். ஆண்டுக்கு ரூ.500 கோடி வருமானத்தை உதறவிட்டு அரசியலுக்கு வந்தவர் விஜய். விஜய் உடன் தான் மக்கள் சக்தி உள்ளது. என் உயிர் மூச்சு உள்ளவரை தவெகவிற்கு பணியாற்றுவேன். விஜயை ஆட்சியில் அமரவைக்கும் வகையில் எங்கள் பணிகள் அமையும்.
மக்கள் நலனுக்கான விஜயின் சேவை தொடரும். 2025 தேர்தலில் வெற்றி பெற்று நேர்மையான, புனிதமான ஆட்சியை விஜய் தருவார். எவ்வளவு தடைகள் வந்தாலும் மக்கள் சக்தியின் உதவியுடன் விஜய் முதல்-அமைச்சர் ஆவார். யாரும் யார் படத்தையும் வைத்துக்கொள்ளலாம் என்றளவில் தவெகவில் ஜனநாயகம் உள்ளது. நான் என்று ஒருவன் நினைத்தால் ஆண்டவன் தான் என்று காட்டுவான்.
இவ்வாறு அவர் கூறினார்.