மழை ஓய்ந்ததால் தவெக மாநாட்டுக்கான ஏற்பாடுகள் மும்முரம்

 
ச் ச்

தமிழக வெற்றிக் கழக மாநாடு நடைபெறும் இடத்தில் விழுப்புரம் மாவட்ட எஸ்.பி. தீபக் சிவாச் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

Image

தமிழக வெற்றிக் கழக முதல் மாநாடு வருகிற 27-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாலை விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியை அடுத்த வி.சாலை பகுதியில் நடைபெற உள்ளது. இதற்காக 85 ஏக்கர் பரப்பளவில் மாநாட்டுக்கான பணிகள் நடைபெற்று வருகிறது. 50 அடி அகலம், 200 அடி நீளத்திற்கு மேடை அமைக்கப்பட்டு வருகிறது. மாநாட்டு பணிகளை ஒருங்கிணைக்க 27 குழுக்களை கட்சியின் தலைவர் நடிகர் விஜய் அமைத்தார். குறிப்பாக சட்டம், போக்குவரத்தை ஒருங்கிணைக்க குழு அமைக்கப்பட்டிருந்தது. மேலும் 234 தொகுதிகளுக்கும், தொகுதி வாரியாக பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர்.

Image


இந்நிலையில் மழை ஓய்ந்ததால் மாநாட்டுக்கான ஏற்பாடுகளை தமிகக வெற்றி கழகத்தினர் மும்மரம் காட்டிவருகின்றனர். த.வெ.க மாநாடு நடைபெறவிருக்கும் விக்கிரவாண்டி வி சாலை பகுதியில் ஆய்வு நடத்த வந்த விழுப்புரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரை த.வெ.க பொதுச்செயலாளர் என்.ஆனந்த் அழைத்துச்சென்று விவரித்தார். மாநாட்டுக்கான மேடை உள்ளிட்ட பகுதிகளில் நேரில் ஆய்வு செய்த எஸ்.பி, விவசாய நிலத்தில் வாகனங்களை நிறுத்தும்போது பாதுகாப்பு இருக்க வேண்டும் என அறிவுறுத்தினார். 200 ஏக்கரில் வாகன நிறுத்துமிடம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததால் விழுப்புரம் மாவட்ட காவல்துறையினர் திருப்தி அடைந்தனர்.