ராணுவ வீரரின் மனைவி மீது தாக்குதல் - ராணுவத்திற்கு அறிக்கை அளித்த காவல்துறை

 
tn

ராணுவ வீரரின் மனைவி மீது தாக்குதல் நடத்தியதாக கூறப்பட்ட புகாரில்  ராணுவத்திற்கு காவல்துறை அறிக்கை அளித்துள்ளது.

tn

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த படமேடு கிராமத்தை சேர்ந்தவர் பிரபாகரன். இவர் ஜம்மு காஷ்மீரில் ராணுவ வீரராக பணிபுரிந்து வரும் நிலையில்,  இவரது மனைவி கீர்த்தி. இவர் அதே பகுதியில் ராமு என்பவரின் கடையை வாடகைக்கு எடுத்து பேன்சி ஸ்டோர் நடத்தி வந்துள்ளார்.  கடை சம்பந்தமாக ராணுவ வீரர் பிரபாகரனின் மனைவி கீர்த்தி கீர்த்திக்கும் ,ராமுக்கும் பிரச்சினை ஏற்பட்டுள்ளது .இதில் இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதில் படுகாயம் அடைந்த கீர்த்தி மற்றும் ராமு ஆகியோர் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர் . கீர்த்தியின் கணவர் பிரபாகரன் ஜம்மு காஷ்மீரில் இருந்து வீடியோ வெளியிட்ட நிலையில் , தான் ராணுவத்தில் பணிபுரிகிறேன் என்றும் கோவில் கடை சம்பந்தமாக ராமு என்பவர் அடியாட்களுடன் வந்து கடையை சூறையாடி என் மனைவி மீது கொலை வெறி தாக்குதல் நடத்தினர் என்று கூறியிருந்தார்.

arrest

இதுகுறித்த விசாரணையில் ராணுவ வீரர் மனைவியை யாரும் தாக்கி மானபங்கம் செய்யவில்லை என்பது தெரியவந்தது. இந்த சம்பவத்தில் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து 2 தரப்பிலும் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ராணுவ வீரரின் மனைவி தாக்குதல் புகாரில் திருவண்ணாமலை காவல்துறை எடுத்த நடவடிக்கைகள் குறித்து விரிவான அறிக்கை ராணுவத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தாக்குதல்  விவகாரத்தை மிகைப்படுத்தி கூறுமாறு செல்போனில் உறவினர்களிடம் கூறிய ஆடியோ வெளியான நிலையில் ராணுவ வீரர்  பிரபாகரன் அவரது மனைவி உள்ளிட்ட நான்கு பேர் தலைமறைவாகியுள்ளனர். சதி திட்டம் தீட்டிய புகாரில் ராணுவ வீரரின் உறவினர் வினோத் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளார்.