பிப்ரவரி 22ஆம் தேதி வரை பேரவை கூட்டத்தொடர்!!

 
govt

பிப்ரவரி 22ம் தேதி வரை சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெறும் என சபாநாயகர் அபாவு தலைமையில் நடந்த அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

20.2.2024 (செவ்வாய்க்கிழமை)

tn

2024-2025-ஆம் ஆண்டுக்கான வேளாண்மை நிதிநிலை அறிக்கை அளிக்கப்பெறுதல்.

(i) 2024-2025-ஆம் ஆண்டின் செலவிற்கான முன்பண மானியக் கோரிக்கைகள் பேரவைமுன் வைத்தல்.

(ii) 2024-2025-ஆம் ஆண்டின் செலவிற்கான முன்பண மானியக் கோரிக்கைகள் மீது வாக்கெடுப்பு (விவாதமின்றி). (iii) 2024-2025-ஆம் ஆண்டின் செலவிற்கான முன்பண மானியக் கோரிக்கைகள் குறித்த நிதி ஒதுக்கச் சட்டமுன்வடிவு அறிமுகம் செய்தலும், ஆய்வு செய்தலும், நிறைவேற்றுதலும் (விவாதமின்றி).

21.2.2024 (புதன்கிழமை)

(i) 2023-2024-ஆம் ஆண்டின் கூடுதல் செலவிற்கான மானியக் கோரிக்கைகள் (இறுதி) பேரவைக்கு அளித்தல்.

(ii) 2023-2024-ஆம் ஆண்டின் கூடுதல் செலவிற்கான மானியக் கோரிக்கைகள் (இறுதி) மீது வாக்கெடுப்பு (விவாதமின்றி).

(iii) 2023-2024-ஆம் ஆண்டின் கூடுதல் செலவிற்கான மானியக் கோரிக்கைகள் (இறுதி) குறித்த நிதி ஒதுக்கச் சட்டமுன்வடிவு அறிமுகம் செய்தலும், ஆய்வு

செய்தலும், நிறைவேற்றுதலும் (விவாதமின்றி).

2024-2025-ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை மற்றும் வேளாண்மை நிதிநிலை அறிக்கை ஆகியவற்றின் மீது பொது விவாதம் - தொடங்குதல்.

22.2.2024 (வியாழக்கிழமை)

tnt

2024-2025-ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை மற்றும் வேளாண்மை நிதிநிலை அறிக்கை ஆகியவற்றின் மீதான பொது விவாதத்திற்குப் பதிலுரை.

சட்டமுன்வடிவுகள் அறிமுகம் செய்தல், ஆய்வு செய்தல்

மற்றும் நிறைவேற்றுதல்.

ஏனைய அரசினர் அலுவல்கள்.

பேரவை வழக்கம்போல் காலை 10.00 மணிக்குக் கூடும்.