ஜூன் 29 வரை சட்டமன்ற கூட்டத்தொடர் நடைபெறும் - சபாநாயகர் அப்பாவு
தமிழக சட்டபேரவை கூட்டத்தொடர், ஜீன் 20ம் தேதி தொடங்கி ஜூன் 29ம் தேதி வரை நடைபெறும் என சபாநாயகர் அப்பாவு அறிவித்திருக்கிறார்.

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி 26(1)-ன்கீழ், மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்கள் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் அடுத்தக் கூட்டத்தை, ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட 24-6-2024-ஆம் நாளுக்குப் பதிலாக 2024-ஆம் ஆண்டு, ஜூன் திங்கள் 20-ஆம் நாள், வியாழக்கிழமை, காலை 10.00 மணிக்கு, சென்னை-600 009, தலைமைச் செயலகத்திலுள்ள பேரவை மண்டபத்தில் கூட்டியுள்ளார்கள் என்று சட்டப்பேரவை முதன்மைச் செயலாளர் தனது அறிக்கையில் அறிவித்துள்ளார்.

இந்நிலையில் ஜூன் 24ஆம் தேதி பேரவை தொடங்கும் என அறிவித்த நிலையில், 20ஆம் தேதியே தொடங்குகிறது; காலை 9.30 மணிக்கு பேரவை தொடங்கி காலை, மாலை என இரு வேளைகளிலும் கூடும் அலுவல் ஆய்வுக் குழு கூட்டத்தில் சட்டப்பேரவை கூட்டத்தொடர் குறித்து முடிவு எடுக்கப்பட்டது; 29 வரை கூட்டத்தொடர் நடக்கும்; விக்கிரவாண்டி இடைத்தேர்தலையொட்டி சட்டப்பேரவை கூட்டத்தொடர் முன்கூட்டியே தொடங்குகிறது என்று சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.


