பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவத்தில் பாஜகவினருக்கு தொடர்பு - அப்பாவு பரபரப்பு பேட்டி

 
பேரவையை வழிநடத்தும் மாற்று தலைவர்கள் யார்? யார்? – அறிவித்தார் சபாநாயகர் அப்பாவு!

பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவத்தில் பாஜகவினருக்கு தொடர்பு இருக்கலாம் என சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு கூறியுள்ளார். 

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. பிரபல ரவுடியான கருக்கா வினோத் என்பவர் இருசக்கர வாகனத்தில் வந்து பெட்ரோல் குண்டு வீசியுள்ளார். பெட்ரோல் குண்டு வீசிவிட்டு இருசக்கர வாகனத்தில் தப்பிக்க முயன்ற கருக்கா வினோத்தை போலீசார், விரட்டி பிடித்து கைது செய்தனர். விசாரணையில் தான் சிறையில் இருந்த காலத்தில் வெளியே வர ஆளுநர் ஒப்புதல் அளிக்காததால் பெட்ரோல் குண்டு வீசியது தெரியவந்தது. பெட்ரோல் வெடிகுண்டு வீசப்பட்ட சம்பவத்தில் கைதான கருக்கா வினோத்திடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ராஜ்பவனின் தாக்குதல் குறித்த புகாரை காவல்துறை பதிவு செய்யவில்லை என ஆளுநர் மாளிக குற்றம்சாட்டி இருந்தது.

இந்த நிலையில், பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவத்தில் பாஜகவினருக்கு தொடர்பு இருக்கலாம் என சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு கூறியுள்ளார். இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள அவர், தமிழகத்தில் இதுவரை பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவங்களை வைத்து பார்க்கும் போது இந்த சம்பவத்தில் பாஜகவினருக்கு தொடர்பு இருக்கலாம் என தோன்றுகிறது. இப்படி சம்பவங்கள் நடக்கிறது என்றால் ஒட்டு மொத்தமாக ஒரு குறிப்பிட்ட இயக்கம், ஒரு குறிப்பிட்ட கட்சி மட்டும்தான் பெட்ரோல் குண்டை வைத்து விளையாடுகின்றனர்.  பாஜக &  இந்து மக்கள் கட்சி திட்டமிட்டு, தமிழ்நாட்டில் அமைதியை சீர்குலைக்கவும், வன்முறையைத் தூண்டவும் திட்டமிட்டு செயல்பட்டு வருகிறது. இவ்வாறு கூறினார்.