தேசிய கீதம் அவமதிப்பு - ஆயுதப்படை உதவி ஆய்வாளர் சஸ்பெண்ட்

 
tn

நாமக்கல் ஆயுதப்படை உதவி ஆய்வாளர் சிவப்பிரகாசம் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

suspend
நாமக்கல் மாவட்டத்தில் அமைச்சர் உதயநிதி நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி கடந்த 28ஆம் தேதி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தேசிய கீதம் இசைக்கப்பட்டது . அப்போது  நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை சேர்ந்த காவல் உதவி ஆய்வாளர் சிவப்பிரகாசம் தேசிய கீதத்தை மதிக்காமல் நாற்காலியில்  அமர்ந்தபடி செல்போனில் பேசிக் கொண்டிருந்தார்.  பின்னர் செல்போனில் பேசி முடித்துவிட்டு சாவகாசமாக அவர் எழுந்து நின்றதாக தெரிகிறது.  இந்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவியது.  காவல் உதவி ஆய்வாளர் தேசிய கீதத்தை மதிக்கவில்லை என புகார் எழுந்த நிலையில்,  அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.

police

இந்நிலையில் நலத்திட்ட உதவி வழங்கும் விழாவில் தேசிய கீதம் இசைத்த போது செல்போனில் பேசிய ராசிபுரம் ஆயுதப்படை உதவி காவல் ஆய்வாளர் சிவப்பிரகாசத்தை சஸ்பெண்ட் செய்து  மாவட்ட எஸ்பி உத்தரவு பிறப்பித்துள்ளார்.