ஏ.ஆர்.ரகுமானை விவாகரத்து செய்வதாக மனைவி அறிவிப்பு

 
வ்

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானை, விவாகரத்து செய்யப்போவதாக மனைவி சாய்ரா பானு அறிவித்துள்ளார்.

எ

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானை, விவாகரத்து செய்யப்போவதாக மனைவி சாய்ரா பானு அறிவித்துள்ளார். இருவருக்கும் இடையே நிரப்ப முடியாத அளவுக்கு இடைவெளி ஏற்பட்டதால் ஏ.ஆர். ரகுமானை விட்டு பிரிவதாகவும் அவர் கூறியுள்ளார்.

ஒருவரையொருவர் ஆழமாக நேசித்தபோதிலும் தீர்க்க முடியாத இடைவெளி ஏற்பட்டுவிட்டதாக தெரிவித்துள்ள சாய்ரா பானு, வாழ்வில் ஏற்பட்ட வலி மற்றும் வேதனையின் காரணமாக கணவனை விலக முடிவு எடுத்துள்ளதாக கூறியுள்ளார். ஆழமான யோசனைக்கு பின்னர் தான் பிரிவது என்ற யோசனையை இருவரும் எடுத்துள்ளதாகவும் சாய்ரா விளக்கம் அளித்துள்ளார்.

ஏ.ஆர்.ரஹ்மான் - சாய்ரா பானு திருமணம் கடந்த 1995ஆம் ஆண்டு நடைபெற்றது. இவர்களுக்கு கதீஜா, ரஹீமா மற்றும் அமீன் என்ற 3குழந்தைகள் உள்ளனர்.