மீண்டும் போலீசாக களமிறங்கும் அதர்வா... வரும் 12ம் தேதி திரைப்படம் ரிலீஸ்..!
'பானா காத்தாடி' படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் அதர்வா. தொடர்ந்து இவர் நடித்த 'பரதேசி', 'இமைக்கா நொடிகள்' போன்ற படங்கள் மூலம் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றார். சமீபத்தில் அதர்வா நடிப்பில் வெளியான டி.என் ஏ திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
இவர் அறிமுக இயக்குனர் ரவீந்திர மாதவா இயக்கத்தில் தணல் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். படப்பிடிப்பு பணிகள் 2 ஆண்டுகளுக்கு முன்பே முடிந்த நிலையில் திரைப்படம் வெளியாகாமல் இருந்தது. இந்நிலையில் படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு வெளியிட்டுள்ளது. இத்திரைப்படம் வரும் 12-ம் தேதி வெளியாக உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிப்பு வெளியாகியுள்ளது
இந்த படத்தில் அதர்வாவிற்கு ஜோடியாக தமிழில் பிரம்மன், மாயவன் போன்ற படங்களில் நடித்த லாவண்யா திரிபாதி இணைந்துள்ளார். அன்னை பிலிம் புரொடக்ஷன் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார்.
இப்படத்தில் ஷா ரா, செல்வா, பரணி, அழகம் பெருமாள், போஸ் வெங்கட், லட்சுமி பிரியா, பாரத், மற்றும் பலர் நடித்துள்ளனர். சக்தி சரவணன் ஒளிப்பதிவை மேற்கொள்ள் கலைவாணன் படத்தொகுப்பை செய்துள்ளார்.
The wait ends – the #ThanalTrailer is OUT NOW! 🔥
— Done Channel (@DoneChannel1) August 31, 2025
Get a glimpse of the rage-filled action ahead of its Sept 12 worldwide release. 🎬✨ #Thanal #ThanalFromSept12 #ThanalTrailer @atharvaamurali @iam_ravimohan @ashwinkakumanu @itslavanya @sakthisaracam@justin_tunes… pic.twitter.com/Ve8GK250jn


