அத்திக்கடவு - அவிநாசி திட்டம் உறுதியளித்தபடி தொடக்கம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்..

 
mkstalin

அத்திக்கடவு- அவிநாசி திட்டத்தை உறுதியளித்தபடி இன்று தொடங்கி வைத்ததில் மகிழ்ச்சியடைகிறேன் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.  

ஈரோடு, திருப்பூர், கோவை ஆகிய மேற்கு மாவட்ட மக்களின்  60 ஆண்டு கால கோரிக்கையாக இருந்த அத்திக்கடவு - அவிநாசி திட்டம், கடந்த 2019ம் ஆண்டு  ரூ.1,659 கோடி பட்ஜெட்டில் தொடங்கப்பட்டது.  தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வந்த  இத்திட்டம், கூடுதல் நிதி ஒதுக்கீட்டுடன்  ரூ. 1916.41 கோடி செலவில் முடிக்கப்பட்டது.  மக்கள் பயன்பாட்டிற்கு தயாராக இருந்த அத்திக்கடவு  - அவிநாசி திட்டத்தை  இன்று காலை 10 மணி அளவில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்   சென்னை தலைமைச் செயலகத்திலிருந்தவாறு  காணொலி வாயிலாக தொடங்கி வைத்தார். 

அத்திக்கடவு - அவிநாசி திட்டம் உறுதியளித்தபடி தொடக்கம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்..  

நிலத்தடி நீரை செறிவூட்ட 6 நீரேற்று நிலையங்கள் அமைக்கப்பட்டு  உபரிநீர் வீணாகாமல் தடுக்கப்படுகிறது.  இந்தத் திட்டம் மூலம் ஈரோடு, திருப்பூர், கோவை மாவட்டங்களில் உள்ள 32 ஏரிகள், 42 ஊராட்சி ஒன்றிய ஏரிகள், 971 குளம், குட்டைகள் என மொத்தம் 1,045 நீர் நிலைகள் நிரப்பப்பட்டு 24,468 ஏக்கர் நிலங்கள் இந்ததிட்டத்தால் பயன்பெறும். இத்திட்டத்தின் மூலம் மூன்று மாவட்டங்களில் உள்ள 50 லட்சம் மக்கள் பயன்பெறுகின்றனர்.

இந்நிலையில் இந்தத் திட்டம் மகிழ்ச்சி தெரிவித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில், “1972-இல் தலைவர் கலைஞர் செயல்படுத்திட முனைந்த அத்திக்கடவு_அவிநாசி திட்டம், பல்வேறு ஆட்சி மாற்றங்களால் தடைப்பட்டிருந்தது. இந்தத் திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி அந்தப் பகுதி மக்கள் கடந்த 2016-ஆம் ஆண்டு காலவரையற்ற உண்ணாவிரதம் இருந்தபோது, அவர்களை நேரில் சந்தித்து, கழக ஆட்சியில் இந்தத் திட்டம் நிச்சயம் நிறைவேற்றப்படும் என்று உறுதியளித்தேன். (https://www.facebook.com/100044432259627/posts/569084433251431/) 

அத்திக்கடவு - அவிநாசி திட்டம் உறுதியளித்தபடி தொடக்கம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்..  

இந்தத் திட்டத்துக்கான பணிகள் 2019-இல் தொடங்கப்பட்டிருந்தாலும், நாம் ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகுதான், இத்திட்டத்தை நிறைவேற்றிட உறுதிபூண்டு, 1,916.41 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திருத்திய நிர்வாக ஒப்புதல் வழங்கப்பட்டுப் பணிகள் விரைவு படுத்தப்பட்டன. ஈரோடு, திருப்பூர், கோவை மாவட்ட வேளாண் பெருங்குடி மக்களின் வாழ்வுக்கு வளம் சேர்க்கும் இந்தத் திட்டத்தை இன்று தொடங்கி வைத்ததில் மகிழ்ச்சியடைகிறேன்!” என்று குறிப்பிட்டுள்ளார்.