திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை - கைதான இருவருக்கும் 13 நாள் நீதிமன்ற காவல்

 
atm robbery

திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள இருவருக்கும் மார்ச் 3ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைத்து விசாரிக்க திருவண்ணாமலை மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஒரே நள்ளிரவில் 4 ஏடிஎம் மையங்களை கேஸ் வெல்டிங் மெஷின் மூலம் உடைத்து 72 லட்சம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தமிழ்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கடந்த 11ம் தேதி நள்ளிரவில் இந்த சம்பவம் நடந்துள்ளது. திருவண்ணாமலை மாரியம்மன் கோவில் 10வது தெருவில் இயங்கி வரும் ஸ்டேட் பேங் ஏடிஎம், தண்டராம்பட்டு சாலையில் உள்ள ஏடிஎம், கலசப்பாக்கம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி அருகே இருந்த ஏடிஎம், போளூர் ரயில் நிலையம் அருகே உள்ள ஏடிஎம் என 4 ஏடிஎம்களில் இந்த கொள்ளை சம்பவம் நடந்துள்ளது.  

atm robbery

இதில் ஈடுபட்டவா்களைப் பிடிக்க 9 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. ஆந்திரம், கா்நாடகம், ஹரியாணா மாநிலங்களில் தனிப்படை அதிகாரிகள் முகாமிட்டு தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.இந்நிலையில், ஏடிஎம் கொள்ளையில் தொடர்புடைய இருவரை நேற்று இரவு காவல் துறையினர் ஹரியாணாவில் கைது செய்தனர். அவர்கள் இருவரையும் காவல் துறையினர் விமானம் மூலம் தமிழகம் அழைத்து வந்தனர். இன்று காலை திருவண்ணாமலை மாவட்ட நீதிமன்ற நீதிபதி முன்பு இருவரும் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களிடம் விசாரணை மேற்கொண்ட நீதிபதி இருவரையும் மார்ச் 3ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார்.