பாஜக தலைவர் மீது அட்டாக்! தேடப்பட்டு வந்த வழக்கறிஞர் கைது

 
tஹ்

ராமநாதபுரம் மாவட்டத்தின் பாஜக தலைவர் தரணி முருகேசனை கூலிப்படை ஏவி கொலை செய்ய முயன்ற வழக்கில் கட்சியின் வழக்கறிஞர் சண்முகநாதன் மற்றும் முன்னாள் மாவட்ட தலைவர் கதிரவன்  ஆகியோர் தேடப்பட்டு வந்த நிலையில்,   வழக்கறிஞர் சண்முகநாதன் கைது செய்யப்பட்டுள்ளனர் .

கடந்த ஏப்ரல் மாதம் 16ஆம் தேதி அன்று மாலை ராமநாதபுரத்தில் ஆர்எஸ்எஸ் பேரணி மற்றும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற தரணி முருகேசனும் நிர்வாகிகளும் அன்றைய தினம் இரவு எட்டு மணிக்கு மறுநாள் வரவிருக்கும் ஆளுநர் ரவியின் வருகை ஏற்பாடு குறித்து ஆலோசனையில் ஈடுபட்டிருந்தனர்.

ஷ்

 அப்போது ஆயுதங்களுடன் நுழைந்து தாக்க முயன்ற ரெண்டு பேரை தரணி முருகேசன் அருகில் இருந்தவர்கள் தடுத்து போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் விசாரணையில் அந்த இரண்டு பேரும் சென்னை கூலிப்படையைச் சேர்ந்த எண்ணூர் மோகன்,  வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த சுரேஷ் என்பது தெரிய வந்திருக்கிறது.

 அந்த இரண்டு பேரும் அளித்த தகவல் படி இந்த வழக்கில் தொடர்புடைய பாஜக முன்னாள் மாவட்ட தலைவர் கதிரவன் , கார் டிரைவர் பாலமுருகன் ஆதரவாளர் விக்னேஸ்வரனை போலீசார் கைது செய்தனர்.  முன்னாள் மாவட்ட தலைவர் கதிரவன் , சண்முகநாதனை இதில் போலீசார் தேடி வந்தனர்.  நேற்றைய தினம் சென்னை விமான நிலையம் அருகே சண்முகநாதனை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.