பெரம்பலூர் கல்குவாரி டெண்டர் கோர வந்த பாஜகவினர் மீது தாக்குதல்- திமுகவினர் 12 பேர் கைது

 
பெரம்பலூர் கல்குவாரி டெண்டர் கோர வந்த பாஜகவினர் மீது தாக்குதல்- திமுகவினர் 12 பேர் கைது

பெரம்பலூர் கல்குவாரி டெண்டர் விடுவதில் எழுந்த கலவரம் தொடர்பாக போலீஸார் வழக்குபதிவு செய்து தேடி வந்த திமுகவினரில் 12 பேர் இரவோடு இரவாக கைது செய்யப்பட்டுள்ளனர்.

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று முன்தினம்  கல்குவாரி டெண்டர் ஒப்பந்தப்புள்ளி கோரும் நிகழ்வின்போது ஆளுங்கட்சி மற்றும் பா.ஜ.கவினர் இடையே நடந்த மோதலில் சுரங்கத்துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறையினரை ஆளுங்கட்சியனர் தாக்கியதில் பெரும் சர்ச்சை எழுந்துவந்த நிலையில், அமைச்சர் சிவசங்கர் மற்றும் பெரம்பலூர் எம்.எல்.ஏ பிரபாகரன் ஆகிய இருவரது உதவியாளர்களான மகேந்திரன் மற்றும் சிவசங்கரன் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்டோர் மீது வழக்கு பதியப்பட்டிருந்தது.

இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக அதிமுக பொ.செயலாளர் எடப்பாடி, பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட எதிர்கட்சியினர் இந்த பிரச்சனை தொடர்பாக நேற்று கண்டன அறிக்கை வெளியிட்டிருந்தனர் இதையடுத்து முதல்வர் ஸ்டாலின் இந்த பிரச்சனையில் பாரபட்சம் காட்டாமல் நடவடிக்கை எடுக்கும்படி காவல்துறைக்கு உத்தரவிட்டதாக தெரிகிறது. இதையடுத்து நேற்று இரவு இவ்வழக்கில் தொடர்புடையதாக கூறி திமுக-வினர் 12 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டுவருகிறது.