செய்தியாளர் மீது தாக்குதல் - திருமாவளவன் கண்டனம்

 
thiruma

தனியார் செய்தியாளர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கு திருமாவளவன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

tn

திருப்பூர், பல்லடத்தைச் சேர்ந்த நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சியின் செய்தியாளர் நேசபிரபு  மீது சமூக விரோதிகள் கோரத்தாக்குதல் நடத்தினர். தாக்குதல் நடத்தப்பட்ட செய்தியாளர் நேசபிரபு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில்பத்திரிகையாளர் நல வாரியத்திலிருந்து ரூ 3 லட்சம் வழங்கிட முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.



இதுதொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன், திருப்பூர் பல்லடம்  பகுதியைச் சார்ந்த  #நியூஸ்_7 தொலைக்காட்சி செய்தியாளரைக் கொலைவெறி கொண்டு தாக்குதல் நடத்திய சமூகவிரோதக் கும்பலை வன்மையாகக் கண்டிக்கிறோம்.  குண்டர் தடுப்புக் காவலில் அந்தக் கும்பலைச் சிறைப்படுத்திட வேண்டுகிறோம் என்று குறிப்பிட்டுள்ளார்.