நடிகை வனிதா விஜயகுமார் மீது தாக்குதல்

 
நடிகை வனிதா விஜயகுமார் மீது தாக்குதல்

நள்ளிரவில் பிரதீப் ஆண்டனியின் ஆதரவாளர் தன்னை தாக்கியதாக நடிகை வனிதா விஜயகுமார்  குற்றஞ்சாட்டியுள்ளார்.

Image

பிக்பாஸ் 3 வது சீசனில் போட்டியாளராக அவர் கலந்துகொண்டவர் நடிகை வனிதா விஜயகுமார். பிக்பாஸ் சீசன் முடிந்த பிறகும் திருமணம் உள்ளிட்ட சர்ச்சைகள் காரணமாக தொடர்ந்து சமூக வலைதளங்களில் வைரலாகிவந்த வனிதா விஜயகுமார், பின்னர் யூடியூப் சேனல் தொடங்கி வீடியோ வெளியிட்டு வந்துகொண்டிருக்கிறார்.

இதனிடயே நடப்பு பிக்பாஸ் சீசன் 7-ல் வனிதா விஜயகுமாரின் மகள் ஜோவிகா கலந்துகொண்டுள்ளார்.  அவருக்கு ஆதரவாக பிக்பாஸ் விமர்சனம் என்ற பெயரில் யூடியூப் சேனலில் பேசி வரும் வனிதா, ரெட் கார்ட் கொடுத்து அனுப்பப்பட்ட பிரதீப் குறித்தும் யூடியூப் சேனலில் விமர்சித்ததாக தெரிகிறது.


இந்த நிலையில் தன்னை பிரதீப்பின் ஆதரவாளர் தாக்கிவிட்டதாக வனிதா விஜயகுமார் எக்ஸ் தளத்தில் பதிவிட்டு உள்ளார். முகத்தில் காயம்பட்ட புகைப்படத்தை பதிவிட்டுள்ள அவர், “பிரதீப் ஆண்டனியின் ஆதரவாளரால் கொடூரமாக தாக்கப்பட்டேன். அது யாரென்பது கடவுளுக்கு தெரியும். பிக்பாஸ் விமர்சனத்தை முடித்துவிடு சகோதரி சவுமியா வீட்டில் நிறுத்தியிருந்த எனது காரை எடுக்க சென்றபோடத இருட்டில் ஒருவர் என் முன் தோன்றி, "ரெட் கார்ட் கொடுக்குறீங்களா? அதுக்கு நீ ஆதரவா" என சொல்லி தாக்கினார்” எனக் குறிப்பிட்டுள்ளார்.