ம.க.ஸ்டாலினை குண்டு வீசி கொல்ல முயற்சி!

 
ச் ச்

பாமகவின் தஞ்சாவூர் மாவட்டச் செயலாளர் ம.க. ஸ்டாலின் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி கொலை செய்ய முயற்சித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

ஆடுதுறை பேரூராட்சி அலுவலகத்தில் ம.க.ஸ்டாலின் இன்று காலை பணிகளை கவனித்துக் கொண்டு இருந்த போது, காரில் வந்த 8 பேர் கொண்ட கும்பல் அலுவலகத்திற்குள் நுழைந்து வெடிகுண்டுகளை வீசித் தாக்கியுள்ளது. இரு குண்டுகள் வெடித்துச் சிதறியதில் அலுவலக கண்ணாடிகள் சேதமடைந்துள்ளன. குண்டு வெடித்ததில் அருண் என்ற இளைஞரும், மர்மகும்பல் அரிவாளால் வெட்டியதில் இளையராஜா என்ற இளைஞரும் காயமடைந்துள்ளனர். அந்த நேரத்தில் ம.க.ஸ்டாலின் இன்னொரு அறையில் மறைந்து கொண்டதால் உயிர் பிழைத்தார். அவரை அலுவலகத்தின் பிற அறைகளிலும், அலுவலகத்திற்கு பின்புறமுள்ள பகுதிகளிலும் தேடிப் பார்த்து விட்டு, அந்த கும்பல் தப்பியோடியுள்ளது.

பட்டபகலில் பாமக பிரமுகர் ம.க.ஸ்டாலினை நோக்கி குண்டு வீசப்பட்ட சம்பவத்தால் ஆத்திரமடைந்த ராமதாஸ் தரப்பு தரவாளர்கள் கும்பகோணம் அருகே ஆடுதுறையில் சாலைமறியலில் ஈடுபட்டனர்.