குடிச்சிட்டு ஆட்டோவை டீ கடைக்குள் விட்ட ஓட்டுநர்! கிரிவலம் முடிந்த கையோடு நடந்த அசம்பாவிதம்

 
ஆட்டோ

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவில் அருகே மது போதையில் ஓட்டுநர் ஓட்டி வந்த ஆட்டோ காபி கடைக்குள் திடீரென புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவில்  எதிரே உள்ள பழைய நகராட்சி அலுவலகம் அருகில் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த செல்வராஜ் (வயது 75) என்பவர்  காபி கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில் இன்று மாலை மது போதையில் ஆட்டோவை ஓட்டி வந்த நபரின் கட்டுப்பாட்டை இழந்து செல்வராஜின் காபி கடைக்குள் ஆட்டோ புகுந்தது. இதில் அவருக்கு காயம் ஏற்பட்டது. மேலும் இந்த விபத்தினால் கடையில் விற்பனைக்காக வைத்திருந்த கூல்ட்ரிங்ஸ், வாட்டர் பாட்டில், கிளாஸ் சிலிண்டர் என்பன உள்ளிட்ட ரூ. 1 லட்சத்து 50 ஆயிரம்  மதிப்பிலான பொருட்கள் சேதம் அடைந்தது.


இதுகுறித்து செல்வராஜ் கொடுத்த புகாரின் பேரில் திருவண்ணாமலை நகர காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தியதுடன் தப்பி ஓடிய ஆட்டோ டிரைவரை தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தினால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக ஆடி மாத பௌர்ணமியை முன்னிட்டு ஏராளமானோர் கிரிவலம் சென்றனர். இந்த நிலையில, சன்னதி கிரிவலம் மேற்கொண்டு திரும்பும் பக்தர்களை பேருந்து நிலையத்துக்கு அழைத்துச் செல்ல ஆட்டோக்கள் வரிசையாக நின்ற நிலையில் பயணிகளை ஆட்டோவில் ஏற்றுவதற்காக முண்டியடித்தன. அப்போது மதுபோதையில் இருந்த டிரைவர் ஒருவர் ஆட்டோவை வேகமாக இயக்க, அது அருகில் இருந்த டீக்கடைக்குள் புகுந்தது குறிப்பிடதக்கது.