ஒரு முடிவோடு இறங்கிய ஆட்டோ ஓட்டுநர்கள்- போராட்டத்தால் ஸ்தம்பித்த சென்னை

 
அச் அச்

ஆட்டோ ஓட்டுநர்களுக்கான குறைந்தபட்ச மீட்டர் கட்டணத்தை உயர்த்தாத தமிழக அரசை கண்டித்து ஆட்டோ ஓட்டுநர்கள் சென்னை அண்ணா சாலையில் இன்று ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.

ஆட்டோ ஓட்டுநர்களுக்கான குறைந்தபட்ச ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்த வேண்டும், உரிய விதிமுறைகள் இல்லாமல் செயல்படும் பைக் டேக்ஸிக்களை தடை செய்ய வேண்டும், ஆட்டோ ஓட்டுநர்களுக்கான ஆன்லைன் அபராதத்தை நீக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று தமிழ்நாடு அனைத்து ஆட்டோ தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.சென்னை மாநகரில் பெரும்பாலான ஆட்டோ ஓட்டுநர்கள் இன்று ஆட்டோக்களை இயக்காமல் நிறுத்தி, தமிழக அரசுக்கு எதிரான தங்களின் எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர்.மேலும் தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக சென்னை அண்ணா சாலை 500க்கும் மேற்பட்ட ஆட்டோ ஓட்டுநர்கள் ஊடாக திரண்டு தமிழக அரசை கண்டித்து பதாய்கைகள் ஏந்தி கோஷங்கள் எழுப்பியவர் போராட்டம் மேற்கொண்டனர். 

இதனைத் தொடர்ந்து செய்தியாளரிடம் பேசிய அனைத்து ஆட்டோ தொழிற்சங்க கூட்டமைப்பு சங்கத் தலைவர் பாலசுப்பிரமணியம், திமுக ஆட்சிக்கு வந்த நாளிலிருந்து ஆட்டோகளுக்கான எரிவாயு கட்டணம், பராமரிப்பு கட்டணம், FC பணிகளை செய்வதற்கான கட்டணம் என அனைத்தும் உயர்த்தப்பட்டுள்ள நிலையில் ஆட்டோ ஓட்டுநர்களுக்கான குறைந்தபட்ச கட்டணம் உயர்த்தப்படாமல் இருப்பதால் தினம்தோறும் பயணிகளிடம் பல்வேறு பாதிப்புகளை எதிர்கொள்வதாகவும் ஆட்டோ ஓட்டுநர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். மேலும் ஆட்டோ ஓட்டுநர்களுக்கான குறைந்தபட்ச கட்டணத்தை உயர்த்த கோரி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும் அவற்றை நடைமுறைப்படுத்தாமல் தமிழக அரசு தொடர்ந்து காலம் தாழ்த்தி வருவதாகவும்  குற்றம் சாட்டியுள்ளனர். 

மேலும் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு ஆன்லைன் மூலம் விதிக்கப்படும் அபராததால் தினம்தோறும் பல்வேறு பாதிப்புகளை சந்தித்து வருவதாகவும்,  சட்டத்திற்கு புறமானது எனவே உடனடியாக இவை ரத்து செய்ய வேண்டும், தனியார் செயலிகள் ஊக்குவிக்கும் தமிழக அரசு ஆட்டோ செயலியை அரசு உருவாக்கி பயன்படுத்த வேண்டும் அப்போதுதான் இந்த பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும் நடைபெற்று வரும் பட்ஜெட் கூட்டத் தொடரில் போக்குவரத்து துறை மானிய கோரிக்கையின் போது எங்களது கோரிக்கை நிறைவேற்றுவது தொடர்பான அறிவிப்பு வெளியிட வேண்டும் இல்லை எனில் வரும் 24ஆம் தேதி தலைமைச் செயலகத்தை ஆட்டோ உடன் சென்று முற்றுகையிட்டு போராட்டம் மேற்கொள்ளதாக எச்சரிக்கை விடுத்தார்.