தன்னாட்சி பொறியியல் கல்லூரிகளுக்கு கடிவாளம்? - அண்ணா பல்கலை. சிண்டிகேட் புதிய முடிவு

 
anna

சென்னையில் அண்ணா பல்கலைக்கழகத்தின் சிண்டிகேட் குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் செமஸ்டர் தேர்வு கட்டணம் உயர்வு ரத்து, மோசடியில் ஈடுபட்ட  பேராசிரியர்களுக்கு வாழ்நாள் தடை உள்ளிட்ட அறிவிப்புகள் வெளியிடப்பட்டன.  அதன் ஒரு பகுதியாக தன்னாட்சி பொறியியல் கல்லூரிகளுக்கு அண்ணா பல்கலைக்கழகம் கடிவாளம் போட்டுள்ளது.  

தமிழ்நாட்டில் 116 பொறியியல் கல்லூரிகள் தன்னாட்சி அந்தஸ்தில் இயங்குகின்றன. இக்கல்லூரிகளுக்கு அண்ணா பல்கலை. பாடத்திட்டம் வழங்கினாலும் சொந்தமாகவே வினாத்தாள் தயாரித்து, தேர்வுகளை இக்கல்லூரிகளே நடத்துகின்றன. இந்த தன்னாட்சி பொறியியல் கல்லூரிகளில், மாணவர்களின் கல்வித்தரத்தை ஆய்வு செய்ய அனைத்து செமஸ்டர்களிலும் ஒரு பாடத்திற்கு பல்கலைக்கழகமே வினாத்தாள் தயாரித்து, தேர்வு நடத்தி, வினாத்தாள் திருத்தம் செய்து மதிப்பெண்கள் வழங்க அண்ணா பல்கலை. சிண்டிகேட் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.  

professor college tamilnadu

இதன்மூலம் மற்ற பாடங்களில் மாணவர்கள் பெறும் மதிப்பெண்களுடன் ஒப்பீடு செய்து , தன்னாட்சி பொறியியல் கல்லூரிகளின் கல்வித்தரத்தை ஆய்வு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. மாணவர்கள் பெறும் மதிப்பெண்களில் குளறுபடி இருந்தால், சம்பந்தப்பட்ட பொறியியல் கல்லூரிகள் மீது நடவடிக்கை எடுக்கவும் சிண்டிகேட்  குழு முடிவு செய்துள்ளது.