அழகுமுத்து பாண்டியன் மறைவு - முதல்வர் ஸ்டாலின் இரங்கல்!!

 
tn

அழகு முத்து பாண்டியன் மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

tn

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தூத்துக்குடி மாவட்ட செயலாளர் எஸ்.அழகு முத்து பாண்டியன். இவர் உடல்நலக்குறைவால் உயிரிழந்துள்ளார். இந்நிலையில் திமுக கழகத் தலைவரும் , தமிழக  முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், "இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் எஸ். அழகுமுத்து பாண்டியன் உடல்நலக்குறைவால் மறைந்தார் என்று அறிந்து மிகவும் வருந்தினேன். கொள்கைப்பற்றுமிக்க தோழரை இழந்து வாடும் பொதுவுடைமை இயக்கத் தோழர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். 

tn

மருமகனை இழந்து தவிக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஐயா நல்லகண்ணு அவர்களுக்கும் தனிப்பட்ட முறையில் எனது ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.