அழகுமுத்துக்கோன் பிறந்தநாள் - ஓபிஎஸ், ஈபிஎஸ் மரியாதை!!

 
TN

அழகுமுத்துக்கோனின் பிறந்தநாளையொட்டி ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் இருவரும் அன்னாரது சிலைக்கு மரியாதை செலுத்தினர்.

tn

இதுகுறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது ட்விட்டர் பக்கத்தில், தாய் நாட்டின் விடுதலைக்காக ஆங்கிலேயர்களின் பீரங்கி தாக்குதலை தன் மார்பில் தாங்கி இன்னுயிரை இழந்த மாவீரன் , இந்திய திருநாட்டின் முதல் சுதந்திரப் போராட்ட வீரர்,  மாவீரன் #அழகுமுத்துக்கோன் அவர்களின் 266வது குருபூஜை விழாவில் அண்ணார்அவர்களின் தியாகத்தை வணங்கி; சென்னை எழும்பூரில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினேன்.என்று குறிப்பிட்டுள்ளார்.


அதேபோல் முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், 1857 ஆம் ஆண்டு நடைபெற்ற சிப்பாய் கலகம் தான் முதல் இந்திய சுதந்திரப் போருக்கு அடித்தளம். இதற்கு நூறு ஆண்டுகளுக்கு முன்பே ஆங்கிலேயரின் கட்டளைகளை ஏற்க மறுத்து வீர மரணம் அடைந்த மாவீரன் அழகுமுத்துக்கோன் அவர்களின் பிறந்தநாள் இன்று. 


தமிழ்நாட்டு மண்ணில் ஆங்கிலேயர் ஆட்சிக்கு எதிராக இந்திய சுதந்திரத்திற்கான விதையை விதைத்த பெருமைக்குரிய மாவீரன் அழகுமுத்துக்கோன் அவர்களின் தியாகத்தையும், தாய்நாட்டின் மீதான அவரின் பக்தியையும் போற்றுவோம்! என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.