"முத்துக்கோனின் வரலாற்றை பாடநூலில் சேர்க்க வேண்டும்" - ராமதாஸ் வலியுறுத்தல்

 
pmk

மாவீரன் அழகுமுத்துக் கோனின் வீரத்தையும், தியாகத்தையும் அடுத்த தலைமுறையினருக்கு கொண்டு செல்ல வேண்டும் என்று  ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

tn

சுதந்திர போராட்ட வீரர் முத்துக்கோனின் 266-வது பிறந்த நாள் இன்று கொண்டப்படுகிறது. இதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் , ஆங்கிலேயர்களுக்கு எதிரான முதல் விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்து,  இன்னுயிரை தியாகம் செய்த  விடுதலைப் போராட்டத் தலைவர் மாவீரன் அழகுமுத்துக் கோனின் 313-ஆவது பிறந்தநாளும், 266-ஆவது குருபூஜையும் இன்று.  ஆங்கிலேயர்களை எதிர்க்க முடியுமா? என மற்றவர்கள் மிரண்டு நின்ற போது, தமது 45-ஆவது வயதில் ஆங்கிலேயப் படைகளை  வீழ்த்தியவர் அழகு முத்துக் கோன். தமது 49-ஆவது வயதில் ஆங்கிலேயர்களுக்கு எதிரான போரில் சூழ்ச்சியால் வீழ்த்தப்பட்டவர். அந்தப் போரில் அவர் பீரங்கி குண்டுகளை மார்பில் தாங்கி சிதறியவர். 


தாய்நாட்டுப் பற்று எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு மாவீரன் அழகுமுத்துக் கோன் சிறந்த எடுத்துக்காட்டு. அவரது வரலாற்றை  அடுத்த தலைமுறைக்கு கொண்டு சென்று சேர்க்க நாம் இந்த நாளில் உறுதியேற்போம். அவரது வீரத்தையும், தியாகத்தையும் போற்றுவோம். அவரது வரலாற்றை பாடநூலில் சேர்க்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். என்று பதிவிட்டுள்ளார்.