“இது வேகாத கறிங்க..” கேஎப்சி சிக்கனில் துர்நாற்றம்- வாடிக்கையாளர் வாக்குவாதம்
சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் எதிரே உள்ள பிரபல தனியார் துரித உணவகத்தில் வழங்கப்பட்ட சிக்கனில் துர்நாற்றம் வீசியதாக வாடிக்கையாளர் ஒருவர் புகார் அளித்துள்ளார்.
செங்கல்பட்டு மாவட்டம் கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையம் எதிரே பிரபல துரித (KFC) உணவகம் செயல்பட்டு வருகிறது. இந்த உணவகத்தில் இன்று இரவு 8 மணி அளவில் பெருமாட்டு நல்லூர் பகுதியைச் சேர்ந்த கோபிநாத் என்பவர் கிரிஸ்பி சிக்கன் மற்றும் சிக்கன் பர்கர் உள்ளிட்டவற்றை சுமார் 929 ரூபாய் கொடுத்து வாங்கி உள்ளார். தொடர்ந்து உணவுகளை வீட்டிற்கு எடுத்துச் சென்று தனது குடும்பத்துடன் அமர்ந்து சாப்பிட்டுள்ளார். அப்போது அவர் வாங்கிச்சென்ற கிரிஸ்பி சிக்கனில் இருந்து துர்நாற்றம் வீசி உள்ளது. மேலும் சிக்கன் சரியாக வேகாத நிலையிலும், சிக்கனில் எலும்பை கடித்தபோது அதில் கெட்ட வாடை வீசிய நிலையில் ரத்தம் உறைந்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
#Watch|| கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் அருகே பிரபல துரித உணவகத்தில் வழங்கப்பட்ட ஃப்ரைடு சிக்கனில் வீசிய துர்நாற்றம் ஊழியர்களிடம் வாடிக்கையாளர் கடும் வாக்குவாதம் #ThanthiTV #chicken #Food pic.twitter.com/3taI27brfV
— Thanthi TV (@ThanthiTV) November 17, 2024
தொடர்ந்து சிக்கனை எடுத்துக் கொண்டு கடைக்குச் சென்ற கோபிநாத் கடை ஊழியர்களுடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மேலும் இதுகுறித்து கடை ஊழியர்களிடம் கேட்டபோது முறையான பதில் அளிக்க உள்ள எனக் கூறி உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளார். பிரபல தனியார் துரித உணவகத்தில் வழங்கப்பட்ட சிக்கனில் துர்நாற்றம் வீசிய சம்பவம் குறித்து கடை ஊழியர்களிடம் வாடிக்கையாளர் வாக்குவாதத்தில் ஈடுபட்ட காட்சிகள் இணையதளத்தில் வேகமாக பரவி வருகின்றன.