#BREAKING டி20 உலகக்கோப்பையில் விசில் எடுத்து செல்ல தடை
Updated: Feb 9, 2026, 21:04 IST1770651250117
டி20 உலகக்கோப்பையில் விசில் உட்பட 12 பொருட்களுக்கு ICC தடை விதித்துள்ளது.

சேப்பாக்கம் மைதானத்தில் ரசிகர்கள் விசில் எடுத்து செல்ல தடை விதித்து அதிகாரபூர்வமாக அறிவித்தது தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம். சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியை பார்க்க வந்த ரசிகர்கள் எடுத்து வந்த விசிலை காவல்துறையினர் பறிமுதல் செய்தது பேசு பொருளானது. இந்நிலையில் மைதானத்திற்குள் ரசிகர்கள் கொண்டு செல்ல தடை செய்யப்பட்ட பொருட்களுக்கான புதிய பட்டியலில் விசில் இடம்பெற்றுள்ளது. அதன்படி, டி20 உலகக்கோப்பையில் விசில் உட்பட 12 பொருட்களுக்கு ICC தடை விதித்துள்ளது. அதிக சத்தம் எழுப்பக்கூடிய விசில், ஹாரன் உள்ளிட்டவற்றை மைதானத்திற்குள் ரசிகர்கள் எடுத்து செல்லவும் ஐசிசி தடை விதித்துள்ளது.


